தோனியின் போட்டோ இருந்த வாட்டர் பாட்டிலை பார்த்ததும் ஷாக்கான விராட் கோலி!

0
3360

தோனியின் புகைப்படம் இடம் பெற்றிருந்த வாட்டர் பாட்டிலை பார்த்ததும் சற்று ஆச்சரியப்பட்டுள்ளார் விராட் கோலி.

கிரிக்கெட் வீரர்கள் பலர் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவர்களின் பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விளம்பரப்படுத்தில் நடிப்பது வழக்கம்.

- Advertisement -

குறிப்பாக இந்தியாவில் ‘கிரிக்கெட்’ கடைக்கோடி மக்கள் வரை பரவி இருக்கிறது. ஆகையால் கிரிக்கெட் வீரர்களுக்கு என்று தனி மவுசு இங்கு உண்டு.

அந்த வகையில் கடந்த ஜெனரேஷனில் பிரபலமாக இருந்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், கங்குலி ஆகியோரை பல்வேறு விளம்பரங்கள் வெளிவந்தன. தற்போது பிரபலமாக இருக்கும் விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்றோர் தொடர்ச்சியாக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

பொதுவாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை பல நிறுவனங்கள் தங்களது விளம்பர படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளும். ஏனெனில் இதற்கு மேல் அவர்களின் பிரபலம் குறைந்து கொண்டே வரும் என்ற அடிப்படையில் இந்த முடிவுக்கு நிறுவனங்கள் வருகின்றன.

- Advertisement -

தற்போது உச்சத்தில் இருப்பவர் விராட் கோலி. தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கும் மேலாகி விட்டன. ஆனால் விராட் கோலிக்கு இணையாக தோனி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வருகிறார்

அண்மையில், பாட்டிலில் தண்ணீரை விற்கும் நிறுவனத்தின் விளம்பரப்படத்த்தில் தோனி நடித்திருந்தார். அந்நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் ஸ்டிக்கரில் தோனியின் படம் இடம்பெற்றிருந்தது.

தோனியின் படத்துடன் வாட்டர் பாட்டிலை பார்த்ததும் ஷாக் ஆன விராட் கோலி, வாட்டர் பாட்டிலின் புகைப்படம் எடுத்து உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்து, “எங்கு பார்த்தாலும் தோனி தான் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தோனியை பற்றி பேசுவதும், தோனியின் புகழ் பாடுவதும் விராட் கோலியின் வழக்கமாக இருக்கிறது. விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தோனியின் பங்களிப்பு இன்றியமையாதது. இதை அவரே பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதும் கிடைக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் தோனியை பற்றி தவறாமல் பேசி விடுகிறார். அதற்கு இன்று விராட் கோலி செய்திருக்கும் இன்னொரு செயலும் ஒரு எடுத்துக்காட்டு.