கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

அடுத்த 90 நாட்களில் விராட் ரோஹித் ராகுல் கிரிக்கெட் கேரியரில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது – காரணங்களை அடுக்கிய ஆகாஷ் சோப்ரா!

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இது மிக முக்கிய ஒரு தொடராக அமைகிறது.

- Advertisement -

தற்பொழுது ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த நான்கு மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் வரையில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பெரிய அளவில் டி20 போட்டிகளில் விளையாடாது.

அதே சமயத்தில் அடுத்த நான்கு மாதங்களில் அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பங்கேற்கும்.

தற்போதைய ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய டி20 அணியில் மேலும் பல புதிய வீரர்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் பெரிய மாற்றங்கள் வருவதற்கான சூழல்கள் தென்படுகின்றன.

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா பேசுகையில் “டி20 கிரிக்கெட் வடிவத்திற்கான அடுத்த தலைமுறைக்கான வீரர்கள் ஏறக்குறைய தயாராகி விட்டதாக நான் உணர்கிறேன். முந்தைய தலைமுறை வீரர்கள் இந்த டெம்ப்ளேட்டின் ஒரு பகுதியாக இருப்பது கடினம் என்று நினைக்கிறேன்.

இது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்க இருக்கும் ஆண்டு. எனவே இந்திய அணி அதிகப்படியான டி20 போட்டிகளில் விளையாடாது. குறைந்த டி20 போட்டிகளில் விளையாடினாலும் அதில் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியவரை பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் கே.எல்.ராகுல் எப்போது வருவார் என்று கூட தெரியாது.

ஜெய்ஸ்வாலுக்கு என்று நான் ஒரு கால அளவு வைத்திருக்கிறேன். அவர் அடுத்த 90 நாட்களில் இந்திய அணியில் இருப்பார். இவரைப் போலவே ரிங்கு சிங்கும் இருக்கிறார். இது அவரை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம். மேலும் உள்நாட்டு முதல் தர போட்டியில் அவரது சராசரி 60. மேலும் ஜெயஸ்வால் உள்நாட்டு குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இவர்கள் ஐபிஎல் தவிர்த்து மற்ற வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by

Recent Posts