19வது ஓவரில் 2 சிக்ஸ், பைனலில் தோனி அடித்த சிக்ஸ்-க்கு சமம் – ஜாம்பவான் கருத்து!

0
1355

19வது ஓவரில் விராட் கோலி அடித்த இரண்டு சிக்ஸர்கள் உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி அடித்த கடைசி வரைக்கும் சமம் என்று கருத்து தெரிவித்துள்ளார் கப்பில் தேவ்.

விறுவிறுப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதயத்துடிப்பை சற்றும் குறைக்காமல் கடைசி ஓவர் வரை போட்டியை இரு அணிகளும் எடுத்துச் சென்றன.

- Advertisement -

இந்தியாவுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயத்திருந்தது பாகிஸ்தான் அணி. 10 ஓவர்களில் இந்திய அணி 60 ரன்களுக்கும் குறைவாகவே அடித்திருந்தது.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் போட்டியின் வேகத்தை அதிகரிக்க பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசத் துவங்கினர். கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவைப்பட்டது.

நல்ல பார்மில் இருந்த ஹாரிஸ் ரவுப் 19வது ஓவரை வீசினார். முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே வந்திருந்தது. கடைசி இரண்டு பந்துகளில் இரண்டையும் பவுண்டரிகளாக அடித்தாக வேண்டும் என்று இருந்த சூழலில், விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி 15 ரன்கள் ஓவராக மாற்றினார்.

- Advertisement -

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் துரதிஷ்டவசமாக ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். அதன் பிறகு விராட் கோலி பார்த்துக்கொண்டார். இறுதியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 19 ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த இரண்டு சிக்சர் குறித்து ஜாம்பவான் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார். “மிக முக்கியமான கட்டத்தில் அந்த இரண்டு சிக்சர்கள் வந்தது. தற்போது வரை விராட் கோலி அதை எப்படி செய்தார் என்று பிரமித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கடைசியாக தோனி அடித்த அந்த சிக்சரின் வீடியோ காட்சி பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு அதிக முறை நான் பார்த்தது விராட் கோலி அடித்த இந்த இரண்டு சிக்சர்கள் தான்.

என்னால் தற்போது வரை அதை மறக்க முடியவில்லை. கோலியின் அனுபவம் அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்று கூறவேண்டும். இப்படி ஒரு அழுத்தம் நிறைந்த சூழலில் இளம் வீரர்களால் இவ்வளவு எளிராக கையாண்டு வெற்றியை பெற்று தந்திருப்பது கடினம் என நான் நினைக்கிறேன்.” என்று உணர்வுபூர்வமாக பேசினார்.