வீடியோ: உமேஷ் யாதவ் காட்டிய வானவெடிக்கை… அட்ரா அட்ரா உமேஷ்… குதித்து கொண்டாடிய விராட் கோலி!

0
169

உமேஷ் யாதவ் அடித்த சிக்ஸை சிறுவன் போல குதித்து கொண்டாடினார் விராட் கோலி. இதன் வீடியோ கட்சியை காண்போம்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கினார். இந்த முடிவு இந்திய அணிக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வரிசையாக விக்கெட் எடுத்தனர்.

கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்கள், ஷுப்மன் கில் 21 ரன்கள், புஜாரா 1 ரன் அடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஜடேஜா(4) மற்றும் ஷ்ரேயாஸ்(0) இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கடந்தது இந்திய அணி.

நிதானத்துடன் ஆடிய விராட் கோலியும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. 22 ரன்களுக்கு மர்பி பந்தில் அவுட்டானார். 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்திருந்த கேஎஸ் பரத் 17 ரன்களில் அவுட்டானார். அஷ்வினும் 3 ரன்களில் வெளியேறியதால், 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்தது.

- Advertisement -

பின்னர் உள்ளே வந்த உமேஷ் யாதவ், 2 சிக்ஸர் 1 பவுண்டரி அடித்து வானவெடிக்கை காட்டியதால், இந்தியாவின் ஸ்கொர் 100 ரன்களை எட்டியது. மர்பி பந்தை உமேஷ் யாதவ் அடித்த சிக்ஸரை கண்டு, பெவிலியனில் இருந்த விராட்கோலி சிறுவன் போல துள்ளிகுதித்து கொண்டாடினார். இது பார்ப்பதற்க்கே நன்றாக இருந்தது.

வீடியோ:

இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி., அணிக்கு குன்னமென் 5 விக்கெட்டுகள் எடுத்தார். டெஸ்ட் அரங்கில் இவர் எடுக்கும் முதல் 5 விக்கெட் இதுவாகும். லயன் 3 விக்கெட்டுகள், மர்பி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்துவரும் ஆஸி., அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 9 ரன்களுக்கு அவுட்டானார். ஆஸி., அணி 38 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடிவருகிறது.