விராட் கோலிக்கு இந்த பிரச்சனை இன்னும் தீரல காரணம் இதுதான் – வாசிம் ஜாபர் விளக்கம்!

0
414
Viratkohli

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது!

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் கில் உடைய இரட்டை சதத்தால் 349 ரன்கள் குவித்து, பின்பு பந்துவீச்சில் நியூசிலாந்தின் முதல் ஆறு விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி பின்பு பிரேஸ்வெல்லின் அதிரடியில் சிக்கி, ஒருவழியாக இறுதியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்பொழுது முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் கில் தவிர இந்திய அணியில் யாரும் 40 ரன்கள் தாண்டவில்லை. இந்தியா வந்திருந்த இலங்கை அணி உடனான ஒருநாள் தொடரில் விராட் கோலி முதல் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதங்களை அடித்து மீண்டும் பழைய விராட் கோலியாக திரும்பி வந்தார். ஆனால் நியூசிலாந்து அணி உடனான முதல் ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்தபடி அவரிடம் இருந்து பெரிய ஆட்டம் வரவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடம் அவர் வழக்கமாக ஆட்டம் இழப்பதை போல் சான்ட்னர் பந்து வீச்சில் போல்ட் ஆகி 10 பந்துகளில் எட்டு ரன்கள் வெளியேறினார்!

தற்பொழுது விராட் கோலி இப்படி ஆட்டம் இழப்பது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர் கூறுகையில் ” விராட் கோலி பந்தின் லைனை கவர் செய்யாமல் விட்டு விடுகிறார். மேலும் அவர் ஃப்ரண்ட் புட்டில் விளையாட வேண்டிய பந்துக்கு பேக் போட்டியில் போய் விளையாடி ஆட்டம் இழக்கிறார். முன்பு இதே முறையில் லெக் ஸ்பின்னர்களிடம் ஆட்டம் இழந்தார் தற்பொழுது இடது கை சுழற் பந்துவீச்சாளர்களிடம் ஆட்டமிழக்கிறார்!” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் கில் பற்றி கூறுகையில் ” கில் அனைத்து வழிகளிலும் சென்று சிறப்பான வீரராவதற்கு தேவையான அடிப்படை தகுதிகளை கொண்டவராக இருக்கிறார். அதை அடைய அவர் இன்னும் தூரம் போக வேண்டும். ஏனென்றால் அவருக்கு முன்பாக சச்சின் விராட் கோலி போன்ற மிகப்பெரிய லெஜென்ட்கள் இருக்கிறார்கள். அவர் தொடர்ந்து கடினமாக உழைத்தால் அவர் நிச்சயமாக அந்த மகத்துவ நிலையை அடைய முடியும்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -