ரஞ்சி டிராபி டெல்லி அணியில் விராட் கோலி பெயர்.. மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுகிறாரா? – வெளியான தகவல்கள்

0
59
Virat

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பான உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபி 2024-25 சீசனுக்கு டெல்லி அணிக்கு விளையாட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் விராட் கோலி பெயர் இடம் பெற்று இருக்கிறது.

இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் அக்டோபர் 11ம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இப்படியான நிலையில் தான் டெல்லி மாநில கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியலில் இந்திய தேசிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பெயர் இடம் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி

விராட் கோலி கடைசியாக ரஞ்சி டிராபி தொடரில் 2019 ஆம் ஆண்டு விளையாடி இருந்தார். இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் நடப்பு ரஞ்சி சீசனுக்கு டெல்லி அணிக்கு விளையாட வாய்ப்புள்ள 84 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில்தான் விராட் கோலியின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

அதே சமயத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்பதால், அவர் கண்டிப்பாக ரஞ்சி டிராபியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. அதே சமயத்தில் இஷாந்த் சர்மா பெயர் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

உடல் தகுதி தேர்வு விலக்கு

தற்போது டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் அறிவித்திருக்கும் 84 பேர் கொண்ட அணி 15 முதல் 20 பேர் கொண்ட அணியாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் விராட் கோலி இந்த முறை ரஞ்சி டிராபி விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் செய்திகள் வந்திருக்கிறது. இது சம்பிரதாயமான பெயர் சேர்ப்பு போல தெரிவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 60 ரன்ஸ்.. சச்சினின் மகத்தான சாதனையை முந்திய ஸ்டீவ் ஸ்மித்.. இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டி

மேலும் வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு குறித்து டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் அறிக்கையில் “தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு செப்டம்பர் 26 2024 ஆம் ஆண்டு நடைபெறும். தற்போது இந்திய தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -