புது பயிற்சியாளரா கம்பீர் வேண்டாம்.. நேரா தோனியை கொண்டு வாங்க – கோலியின் கோச் சிறப்பு பேட்டி

0
3923
Gambhir

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் யார் யார் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எந்தத் தகவலையும் கூறவில்லை. தற்போது இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தோனி சரியானவராக இருப்பார் என விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பல பிரபல வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் அடிபட்டன. ரிக்கி பாண்டிங் தன்னிடம் பிசிசிஐ அணுகியதாக பேசி இருந்தார். இதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தங்கள் தரப்பிலிருந்து தாங்கள் யாரும் எந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களையும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்.

- Advertisement -

தற்போது கம்பீர் இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறைய செய்திகள் வருகிறது. ஆனால் அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார் என்பது குறித்து இன்னும் யாரும் எதுவும் கூறவில்லை. எனவே இந்த விஷயத்தில் இது ஒரு பெரிய கேள்வியைக் உண்டாக்குகிறது.

மேலும் கம்பீர் மிகவும் கண்டிப்பான ஒருவராக இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணியில் பெரிய வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால், அவரை அந்தப் பதவிக்கு கொண்டு வருவது சரியாக இருக்காது என்று சில முன்னால் வீரர்கள் கருத்து கூறி வருகிறார்கள். ஆனால் கம்பீர் மென்டராக இருந்த கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது.

இதுகுறித்து விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறும் பொழுது “முதலில் இந்த பதவிக்கு எந்த பெயர்கள் பொருத்தமாக இருக்கும் என்று பார்ப்பது சுவாரசியமானதாக இருக்கும். புது பயிற்சியாளராக வரக்கூடியவர் இந்தியராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்தால் அவர் இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார். அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார் மேலும் பெரிய போட்டிகளை வென்று இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 பெஸ்ட் ஐபிஎல் பிளேயிங் XI.. ஹெட் சூரியா ஸ்ரேயாஸ் கிடையாது – ஆகாஷ் சோப்ரா வெளியிட்டார்

மேலும் தோனிக்கு ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய மரியாதை இருக்கும். அவர் நீண்ட காலம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அணியில் வீரர்களை சரியாக திட்டமிட்டு நிர்வகிக்கும் திறன் வேண்டும். ஜோடி கேப்டனாக இந்திய அணிக்கு வந்த பொழுது மிகப்பெரிய வீரர்கள் அணியில் இருந்தார்கள். அவர்களை தோனி மிகச் சிறப்பாக கையாண்டார். எனவே அவரால் தற்போதைய இந்திய அணியிலும் இதைச் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்.