2024 பெஸ்ட் ஐபிஎல் பிளேயிங் XI.. ஹெட் சூரியா ஸ்ரேயாஸ் கிடையாது – ஆகாஷ் சோப்ரா வெளியிட்டார்

0
1368
IPL2024

இரண்டு மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து, இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய சிறந்த ப்ளேயிங் லெவலை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதில் பல ஆச்சரியமான சேர்க்கைகளையும் நீக்கங்களையும் அவர் செய்திருக்கிறார்.

ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் அதிரடியான தாக்கத்தை ஹைதராபாத்துக்கு கொடுத்த துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் இடம் கொடுக்கப்படவில்லை. இவருடைய அணியில் துவக்க வீரர்களாக ஆரஞ்சு தொப்பையை வென்ற விராட் கோலி மற்றும் கொல்கத்தாவுக்கு அதிரடி தாக்கத்தை கொடுத்த சுனில் நரைன் இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு, இதே இடங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு களம் இறங்கி 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஜோடியான சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரையும் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். சூர்யா சரிவர விளையாடாத காரணத்தினால் அவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்திற்கு சிவம் துபே, ஆறாவது இடத்திற்கு விக்கெட் கீப்பராக நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சு ஆல்ரண்டருக்கான இடத்தில் கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா அணி கோப்பையை வென்ற பொழுதிலும் இந்த அணிக்கு கேப்டனாக கம்மின்சை ஆகாஷ் சோப்ரா கொண்டு வந்திருக்கிறார். மீதமுள்ள மூன்று இடங்களுக்கு மேலும் கொல்கத்தா அணியில் இருந்து இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, யாராலும் தவிர்க்க முடியாத ஜஸ்பிரித் பும்ரா, மேலும் சுழல் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி ஆகியோரை தேர்வு செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க : அடிச்சு சொல்றேன்.. இந்தியா தான் டி20 உலக கோப்பையை ஜெயிக்கும்.. இதான் காரணம் – இயான் மோர்கன் கணிப்பு

ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்து இருக்கும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவன் :

சுனில் நரைன், விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரியான் பராக், சிவம் துபே, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், பாட் கம்மின்ஸ் (கே), ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -