இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஆன விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலியின் மோசமான ஃபார்ம்
விராட் கோலி டி20 உலக கோப்பைக்கு பிறகு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மோசமாக விளையாடிய விராட் கோலி, அதற்குப் பிறகு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி 3 இன்னிங்ஸ்களில் சேர்த்து வெறும் 93 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார் என்றும், இத்தகைய பார்மில் இருக்கும் ஒரு வீரர் முன்னணி பேட்ஸ்மேன் ஆக பேட்டிங் ஆர்டரின் டாப் வரிசையில் விளையாட முடியாது என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜாம்பவான்களை கேள்வி கேட்க மாட்டீர்கள்
இதுகுறித்து பாண்டிங் விரிவாக கூறுகையில் “விராட் கோலி குறித்த புள்ளி விவரத்தை நான் ஒரு நாள் பார்த்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இரண்டு டெஸ்ட் சகங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அது எனக்கு சரியாக தோன்றவில்லை. ஆனால் அது சரி என்றால் அது கவலைப்படக்கூடிய விஷயமாக மட்டுமே இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சதம் அடித்த பேட்ஸ்மேன் ஆக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியைத் தவிர யாரும் விளையாடி இருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க:சாம்சன் வெற்றிக்கு பின்னாடி கம்பீர் மாதிரி யாரும் இல்லை.. இது மட்டும் தான் இருக்கு – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி
விராட் கோலி குறித்து நான் முன்பே கூறியிருக்கிறேன். விளையாட்டின் ஜாம்பவான்களை எதுவும் கேள்விகள் கேட்க மாட்டீர்கள். அவர் விளையாட்டில் மிகச் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளையாடுவதை நான் விரும்புகிறேன். சொன்னது போலவே அவரது பதிவு ஆஸ்திரேலியாலில் நன்றாக உள்ளது. அவரது ஃபார்மை மீட்டெடுக்க அவருக்கு இந்த தொடர் உதவியாக இருக்கும். முதல் போட்டியில் ரன்கள் குவித்தால் நான் அதற்கு ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்






