சாம்சன் வெற்றிக்கு பின்னாடி கம்பீர் மாதிரி யாரும் இல்லை.. இது மட்டும் தான் இருக்கு – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
159
Samson

தற்போது சஞ்சு சாம்சன் பேட்டிங் வெற்றியில் கம்பீர் போன்ற பயிற்சியாளர்கள் பங்களிப்பு இருப்பதாகத்தான் நினைக்கவில்லை என ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியாக கூறியிருக்கிறார்.

கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு சாம்சன் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் அவர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்குதான் நஷ்டம் என பேசி இருந்தார்.

- Advertisement -

நான் மிகவும் பெருமைப்படுகிறேன்

சஞ்சு சாம்சன் குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “சஞ்சு தொடர்ந்து இரண்டு சர்வதேச டி20 சதங்கள் அடித்திருக்கிறார் இது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானது. இது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரக்கூடியவன். நான் அவருடைய விளையாட்டின் பெரிய ரசிகன். அவர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து விரும்புகிறேன்”

“சஞ்சு ஒரு முறை ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரில 100 ரன்கள் எடுத்தார். நான் அப்போது மைதானத்தில் இருந்து அதை நேரில் பார்த்தேன். அப்போதுதான் அவர் ஏன் மிகவும் ஸ்பெஷல் ஆனவர் என்பது எனக்கு தெரிந்தது”

- Advertisement -

பயிற்சியாளர்கள் பங்களிப்பு இருப்பதாக நினைக்கவில்லை

“நீங்கள் சஞ்சு சாம்சனை தொடர்ந்து பாலோ செய்து வருபவர்களாக இருந்தால், அவர் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி முடிப்பதை உங்களால் அடிக்கடி பார்க்க முடியாது. அவர் பேட்டிங்கில் பழமைவாதியாக 140 முதல் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட கூடியவராக இருப்பார். ஆனால் அவர் கடைசியாக அடித்த இரண்டு சதங்களையும் எடுத்து நீங்கள் பார்த்தால் 200 ஸ்ட்ரைக் ரேட் மேல் இருக்கிறது”

“அவரை ஏதோ ஒன்று தூண்டி இருக்கிறது. அதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. அவர் எதையும் சிரமமின்றி செய்கிறார். அவர் ஏதாவது வேடிக்கையான ஷாட்டையோ, அல்லது கூட்டத்தை மகிழ்விப்பதற்காகவோ விளையாடுவது போல் தெரியவில்லை”

இதையும் படிங்க : இலங்கை நியூசி வெள்ளைப்பந்து தொடர்கள்.. இந்தியாவில் எப்படி பார்க்கலாம்?.. போட்டிஅட்டவணை மற்றும் நேரம்.. மொத்த விபரங்கள்

“அவருடைய இந்த மாற்றத்திற்கு பின்னால் கம்பீர் மற்றும் பயிற்சியாளர்கள் லட்சுமணன் போன்றவர்கள் இருப்பதாக நினைக்கவில்லை. அவர்களை அவமானப்படுத்தவும் நான் நினைக்கவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் மெச்சூரிட்டி தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் எதையோ கிளிக் செய்து விட்டதாக பார்க்கிறேன். அவர் எல்லா வடிவத்திலும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -