81 ரன்.. மாஸ் காட்டிய மந்தனா.. ஜெமிமா போராட்டம் வீண்.. 8 விக்கெட்டில் டெல்லி அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி

0
391

மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் நான்காவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி டெல்லி அணியின் இன்னிங்ஸ் துவக்கிய ஷெபாலி வர்மா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீராங்கனை லேன்னிங் 17 ரன் எடுத்து வெளியேறினார்.

இதற்குப் பின்னர் களமிறங்கிய மூன்றாவது வரிசை வீராங்கனை ஜெமிமா ரோட்ரியஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய மற்ற வீராங்கனைகள் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேற, டெல்லி அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது. ஜெமிமா அதிகபட்சமாக 22 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் என 44 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பெங்களூர் அணி அபார வெற்றி

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது. பெங்களூர் அணியின் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் லியாட் ஹாஜ் ஆகியோர் பெங்களூர் அணியின் இன்னிங்சை சிறப்பாக துவங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவர்களில் 107 ரன்கள் குவித்தது. வியாட் ஹாஜ் 33 பந்துகளில் 7 பவுண்டரியோடு 42 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க:கண் எதிரே பார்த்துள்ளேன்.. கோலிக்கு இது நடக்கும் வரை பேட்டிங்கில் திருப்தி அடையவே மாட்டார் – டிவில்லியர்ஸ் பேட்டி

47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு விளையாடிய மந்தனா 10 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸ் என அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மந்தனாவின் அதிரடி ஆட்டத்தின் மூலமாக பெங்களூர் அணி 16.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மந்தனா ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். பெங்களூர் அணிக்கு இது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாக அமைந்துள்ளது

- Advertisement -