இந்த பவுலர்கிட்ட விராட் கோலி மாட்டிக்குவார் எச்சரிக்கையா இருக்கணும் – பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை!

0
373
Viratkohli

பிப்ரவரி ஒன்பதாம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது!

இந்திய சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடம் கில்கிரிஸ்ட் தலைமையில் 2004 ஆம் ஆண்டு தொடரை வென்று இருந்தது. அதற்கு பின்பாக ஆஸ்திரேலியா அணிக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தியிருக்கிறது. மேலும் இதுவரையில் ஆஸ்திரேலியாவில் எந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் அணியும் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்று போட்டிகளை வென்று வெல்லும் பொழுது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறும். இப்படியான காரணங்களால் இந்த டெஸ்ட் தொடர் இந்திய ஆஸ்திரேலிய ரசிகர்களை தாண்டி உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரசித்தல் லத்தீப் இந்த தொடரில் விராட் கோலி குறித்து பேசுகையில் ” பேட் கம்மின்ஸ் ஆறு போட்டிகளில் ஐந்து முறை விராட் கோலியை ஆட்டம் இழக்க செய்ததின் மூலம் உண்மையாகவே அவர் அவரை தொந்தரவு செய்து இருக்கிறார். வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் எதிராக அவருடைய ஆதிக்கம் இந்த அளவுக்கு இல்லை. அவர் பந்தை ஆங்கிள் செய்து பின்பு எடுத்துச் செல்லும் விதம் விராட் கோலி மற்றும் பாபர் ஆஸம் போன்ற பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும். எனவே இது நிச்சயமாக கவனிக்கத்தக்க ஒரு போர். பந்து பழையதாக இருந்தாலும் புதியதாக இருந்தாலும் கம்மின்ஸ் நிச்சயம் விராட் கோலிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்திய தரப்பில் சிராஜ் பற்றி பேசும் பொழுது
” சிராஜ் சிறப்பாக பந்து வீசுகிறார் குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக வீசுகிறார். எனவே வார்னர் மற்றும் ஹெட் ஆகியோரது விக்கெட்டுகள் மிக முக்கியமாக இருக்கும். சமீபத்தில் அவர் வெள்ளை பந்து போட்டிகளில் பந்து வீசிய விதம் மற்றும் பங்களாதேஷ் தொடரில் பந்து வீசிய விதம் கம்மின்ஸ் எப்படி ஆஸ்திரேலியா அணிக்கு முக்கியமான பந்துவீச்சாளரோ அதேபோன்று சிராஜ் இந்தியாவுக்கு முக்கியமான பந்துவீச்சாளர் என்று உணர்த்துகிறது ” என்று கூறியுள்ளார்!