“தோனியின் அறிவுரையை ஏற்காத விராட் கோலி ” இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய சம்பவத்தை விவரித்து ஸ்ரீதர்!

0
1995

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன . இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தத் தொடர் முக்கியமானதாகும். இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

2018 மற்றும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் கோப்பைகளை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது . சமீப காலமாக இந்தியா ஆஸ்திரேலியா தொடர்களில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது . கடைசியாக ஆஸ்திரேலியா அணி 2014-15 நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் தான் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஃபீல்ட்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இந்திய அணியின் உடனான தனது அனுபவங்களை “பயிற்சிக்கு அப்பாற்பட்டது: இந்திய கிரிக்கெட் அணியுடன் எனது நாட்கள்” என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டு இருந்தார் . அந்தப் புத்தகத்தில் 2014 ஆம் ஆண்டு அடிலேடு டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி மற்றும் தோனிக்கு இடையே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான உரையாடலை அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் . அப்போது எம்.எஸ். தோனி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை . பின்னர் மெல்பர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த உரையாடலை பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர்” இந்த டெஸ்ட் போட்டியில் தான் விராட் கோலி முதன் முதலாக இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார் . முதலில் இன்னிங்சில் அபாரமாக அடி சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் அந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பலமான நிலையில் இருந்தது . இதன் காரணமாக நான்காவது இன்னிங்ஸில் நாம் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் . எல்லோரும் போட்டியை டிரா செய்ய ஆடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது விராட் கோலி ஆஸ்திரேலியா அணி எவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தாலும் அதை நாம் துரத்தி செல்வோம் என தீர்மானித்தார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் “இந்தப் போட்டியின் கடைசி நாளில் இலக்கை துரத்திச் செல்லும் விராட் கோலியின் திட்டத்தை எம்எஸ் தோனி மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டார் . மேலும் அவரை எப்படியாவது அந்த அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி விராட் கோலி இடம் தோனி சமாதானம் செய்து பார்த்தார்” என்று ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து விராட் கோலி என்னுடன் எம் எஸ் தோனி அவரிடம் கூறியதை பகிர்ந்து கொண்டார். நான்காம் நாள் ஆட்டம் முடிந்து அனைவரும் ஹோட்டலுக்கு திரும்பி கொண்டிருந்தபோது பேருந்தில் விராட் கோலியின் அருகே அமர்ந்த தோனி ” இங்க பாரு விராட் ! அந்த இலக்கை துரத்துவதற்கான திறமை உன்னிடம் இருக்கிறது . உன்னுடைய பேட்டிங்கால் அது சாத்தியப்படும் . ஆனாலும் ஒரு அணியின் கேப்டனாக இருக்கும்போது மற்ற வீரர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும் . அவர்களாலும் இதைச் செய்ய முடியுமா என யோசித்து முடிவு எடுப்பது தான் சிறந்ததாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி ” நாம் எப்போது 360 ரண்களுக்கு மேல் துரத்தி முயற்சி செய்திருக்கிறோம் ? இந்த விஷயம் நம்மால் செய்ய முடியுமா முடியாதா என்று யோசிப்பதற்கு ! வெற்றியோ தோல்வியோ இந்த இலக்கை துரத்த முயற்சி செய்து பார்ப்போம் . முயற்சி செய்து பார்த்தால் தானே நமது பலம் என்ன?பலவீனம் என்ன? என்று தெரியும்” என தோனியிடம் கூறியிருக்கிறார் விராட் கோலி .

அந்தப் போட்டியில் 364 ரன்கள் துரத்திய இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . இந்திய அணிக்காக விராட் கோலி அபாரமாக ஆடி சதம் அடித்தார் . மேலும் முரளி விஜய் 99 ரன்கள் ஆட்டம் இழந்தார் . இந்திய அணி அந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இன்று இந்தியா டெஸ்ட் போட்டிகளில் எட்டியுள்ள உயரத்திற்கு அந்தப் போட்டிதான் ஆரம்பமாக அமைந்தது என்றால் மிகையாகாது .