தற்போது இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய ஏ அணியில் மீண்டும் கருண் நாயர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் மனம் திறந்து வெளிப்படையாக பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 303 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு எடுத்த பிறகு கருண் நாயர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பில் மிக பக்கத்தில் இருக்கிறார்.
கருண் நாயரின் வினோத கிரிக்கெட் வாழ்க்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவில் வைத்து சென்னையில் கருண் நாயர் முச்சதம் அடித்தார். இந்திய அணியின் தொடர்ந்து ஐந்தாவது இடம் அவருக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் ஒரு தொடரில் மட்டுமே வாய்ப்பு கொடுத்து உடனடியாக அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கருண் நாயர் இந்திய உள்நாட்டு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும், மேலும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான முறையில் விளையாடி சதங்கள் மற்றும் ரன்களை குவித்து மீண்டும் இந்திய ஏ அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் அவர் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படுவார்.
இது மூன்றாவது வாய்ப்பு
இது குறித்து கருண் நாயர் பேசும் பொழுது ” முதலில் நிறைய நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு செலெக்ட்டிவ் ஆக விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளத்தான் தெரியும். இந்த விஷயங்களை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் முச்சதம் அடித்த பிறகு என்னை இந்திய அணியில் இருந்து நீக்கியதை, அந்த ஏமாற்றத்தை துக்கத்தை நான் அடக்கி கொண்டேன். தற்போது எனக்கு மூன்றாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது”
இதையும் படிங்க : ஐபிஎல் நிறுத்தப்பட்டாலும், இது மட்டும் எங்களுக்கு நல்லா தெரியும்.. கேகேஆர் வீரர் மனிஷ் பாண்டே பேச்சு
“உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் சிறப்பாக விளையாடிய பொழுது மக்கள் என்னைப் பற்றி பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது மிகவும் சிறப்பான ஒரு உணர்வாகவும் அமைந்தது. ஆனால் நான் அடுத்த போட்டியில் அணிக்காக எப்படி சிறப்பாக பங்காற்றுவது என்பது குறித்து மட்டுமே அதிகம் சிந்தித்தேன். இப்பொழுதும் நான் அப்படியான முறையில் இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.






