விராட் கோலி vs ருதுராஜ் புள்ளி விவரம்.. 23 டி20 போட்டிக்கு பிறகு யார் அதிக ரன்கள் அடித்தது.. ஒரு சிறப்பு பார்வை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாதாரண வீரராக வந்து தற்போது கேப்டனாக உயர்ந்திருப்பவர் தான் ருதுராஜ். டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரைப் பெற்று இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் ருதுராஜ் சமன் செய்திருக்கிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட ருதுராஜ் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இனி சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட போவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ருதுராஜ் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் 23 சர்வதேச டி20 போட்டிகளுக்கு பிறகு விராட் கோலி, ருதுராஜ்  எவ்வளவு ரன்கள் அடித்திருந்தார்கள் என்பதை தற்போது ஒப்பிட்டு பார்க்கலாம்.

கோலி vs ருதுராஜ் அதிக ரன்கள்:

ருதுராஜ் 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய பிறகு மொத்தம் 633 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 39.5 ஆகும். இதில் ருதுராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 5 இன்னிங்ஸில் 223 அடித்து இருந்தார். இதில் அவருடைய சராசரி 55 ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்று இன்னிங்சில் 133 ரன்களும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 இன்னிங்ஸில் 96 ரன்களும் அயர்லாந்து எதிராக இரண்டு இன்னிங்ஸில் 77 ரன்களும் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸில் 35 ரன்களும் அடித்து இருந்தார்.

- Advertisement -

மறுபுறம் விராட் கோலி 23 டி20 போட்டிகளுக்கு பிறகு மொத்தமாக 67 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 37 ஆகும். இதில் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு இன்னிங்சில் 150 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 5 இன்னிங்ஸில் 118 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு இன்னிங்சில் 97 ரன்களும் அடித்து இருந்தார்.

ஸ்ட்ரைக் ரேட், அதிக 50 ரன்கள் எடுத்தது யார்?:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி இரண்டு இன்னிங்ஸில் 30 ரன்கள் அடித்திருந்தார். இலங்கைக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 68 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு இன்னிங்ஸில் 68 ரன்களும் விராட் கோலி அடித்து இருந்தார். 23 சர்வதேச t20 போட்டிக்கு பிறகு ருதுராஜ் ஸ்ட்ரைக் ரேட் 143 என்று அளவில் இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 158 என்ற அளவில் இருக்கிறது. மறுபுறம் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 137 என்ற அளவில் தான் இந்த கட்டத்தில் இருந்திருக்கிறது. 23 சர்வதேச டி20 போட்டியில் ருதுராஜ் ஐந்து முறை 50 ரன்கள், ஒரு சதமும் அடங்கும்.

இதேபோன்று விராட் கோலி ஐந்து முறை ஐந்து அரை சதம் அடித்திருக்கிறார். ஆனால் அது அதிகபட்ச ஸ்கோர் 78 ரன்கள் தான். இப்படி அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது விராட் கோலி ருதுராஜ்க்கு வாடும் சரிசமமான அளவிலே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

- Advertisement -
Published by

Recent Posts