ஐபிஎலுக்குப் பின் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து விலகி ரஞ்சிக் கோப்பையில் விளையாட விராட் கோலி திட்டம் – காரணம் இதுதான்

0
91
Virat Kohli Ranji Trophy

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் விராட் கோலியை சர்வதேச அளவில் ஒரு போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் மிக சுமாராகவே இருந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சுமாராகவே விளையாடினார்.

இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்த நிலையில் அடுத்த வாரம் முதல் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கின்றது. ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த உடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது. தற்பொழுது அந்த டி20 தொடரில் விராட் கோலி பங்கேற்கப் போவதில்லை என்கிற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி

இளம் வயதில் விராட் கோலி டெல்லி அணிக்காக இரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருக்கிறார். தற்போது வந்த செய்தியின் அடிப்படையில் ஐபிஎல் தொடரில் நடந்து முடிந்தவுடன் விராட் கோலி மீண்டும் டெல்லி அணிக்காக இரஞ்சி டிராபி தொடரில் களமிறங்கயிருக்கிறார். மீண்டும் தன்னுடைய பேட்டிங் திறனை வலுப்படுத்த இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

133 ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரையில் 10,292 ரன்கள் குவித்திருக்கிறார். 34 சதங்கள் மற்றும் 36 அரை சதங்கள் உட்பட ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் ஆவெரேஜ் 56.10 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட காரணத்தினால் நம்பர் ஒன் டெஸ்ட் வீரராக ஜொலித்து வந்த அவர் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுவதன் மூலமாக மீண்டும் விராட் கோலி தன்னுடைய பழைய ஃபார்மிற்கு திரும்புவார் என்று நாம் நம்புவோம்.

- Advertisement -