ஜெய்ஸ்வாலுக்கு இரட்டை மனது.. கோலி பக்கம் இந்த விஷயத்தை திருப்பி விட்டு விட்டார் – இர்பான் பதான் பேச்சு

0
104
Jaiswal

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் நான்கு ரன்களில் வெளியேறினார். இதுகுறித்து இர்பான் பதான் கவலை தெரிவித்து இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் சாம் கரன் வீசிய முதல் பந்தை பவுண்டரி அடித்தார். அதற்கு அடுத்து சாம் கரன் இன் ஸ்விங் டெலிவரிகளால் அவரை செட் செய்தார். பிறகு ஒரு பந்தை வெளியில் கொடுக்க, அப்பொழுது ஜெய்ஸ்வால் கால்கள் சரியாக செல்லாமல் விளையாடி, இன்சைட் எட்ஜ் மூலம் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ரோகித் சர்மாவுக்கு அடுத்து துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இடம்பெற்று இருக்கிறார். ஆனால் அவருடைய ஐபிஎல் பார்ம் மிகவும் கவலை அளிப்பதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு இது வலு சேர்க்கிறது.

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “இது ஒரு கவலைக்குரிய பகுதி. அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் டி20 உலகக் கோப்பையில் தொடக்க வீரராக வரவேண்டும் என்று நம்புகிறேன். எதிரணிகள் இடது கை சுழல் பந்துவீச்சாளருடன் துவங்காது. தற்பொழுது இந்திய அணி இவரை தேர்வு செய்ய யோசிக்கும். நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை ரோகித் சர்மாவுடன் இறக்குவதா? இல்லை ஜெய்ஸ்வாலை தொடர்வதா? என்கின்ற யோசனை இந்திய அணி நிர்வாகத்திற்கு வந்திருக்கும். எனவே அவர் பார்ம்க்கு வர வேண்டும்.

ஜோஸ் பட்லர் இல்லாத நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஜெய்ஸ்வால். நேற்று அவர் ஆட்டம் இழந்தது பந்தை காற்றில் அடிப்பதற்கு சென்று கிடையாது. வழக்கமாக அவர் அடிக்கும் கவர் டிரைவ் அடிக்க நினைத்து தான் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : பஞ்சாப் ஈஸி வெற்றி.. ராஜஸ்தான் 2வது இடத்துக்கு பிரச்சனை.. சிஎஸ்கே ஹைதராபாத் குஷி.. மும்பைக்கு பரிதாபம்

அவர் தான் சந்தித்த முந்தைய பந்துகளால் செட் செய்யப்பட்டார். பந்து நன்றாக பேட்டுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர் எதிர்பார்த்த அகலத்தில் ஒரு பந்து கிடைத்தது. ஆனால் அவர் மனம் மிகவும் தயக்கத்துடன் அந்த பந்துக்கு சென்றது. எனவே கால்கள் நகரவில்லை. அதனால் அவர் ஆட்டம் இழந்தார். அவர் இரட்டை மனதுடன் விளையாடினார்” என்று கூறி இருக்கிறார்.