4 பேர் சேர்ந்து சச்சின் கிட்ட என்னை அப்படி பண்ண வச்சாங்க.. அவரே ஆச்சரியம் ஆயிட்டாரு – விராட் கோலி பேட்டி

0
157
Sachin

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கருடன் தனது முதல் சந்திப்பு எப்படி இருந்தது என நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் விட்டுச்சென்ற பேட்டிங் பாரம்பரியத்தை அடுத்து முன்னெடுத்து வந்தவராக விராட் கோலி இருக்கிறார். இந்த நிலையில் தான் இந்திய அணியில் அறிமுகமான பொழுது சச்சின் டெண்டுல்கர் உடன் தனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பில் ஏற்பட்ட சுவாரசிய அனுபவம் பற்றி பேசியிருக்கிறார்.

- Advertisement -

மாறாத தோனியின் கணிப்பு

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பொழுது பேசி இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் டோனி கூறும் பொழுது, இதற்குப் பிறகு இப்படி ஒரு வரவேற்பு ஒரு இந்திய வீரருக்கு கிடைக்க வேண்டும் என்றால் அடுத்த பத்து வருடங்கள் ஆகும் என்று கூறியிருந்தார். அவர் அந்த நேரத்தில் தன்னை வைத்து கூறாமல் மற்ற இளம் வீரர்களை வைத்து பேசி இருந்தார்.

தற்போது அது அப்படியே மாறாமல் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அவருக்கு கிடைத்த வரவேற்பு விராட் கோலிக்கு உலகளவில் கிடைத்து வருகிறது. நாளை அவர் ஓய்வு பெறுகின்ற கடைசி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த உணர்வுபூர்வமான தருணங்கள் அப்படியே அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

சச்சின் ஆச்சரியப்பட்டார்

இதுகுறித்து விராட் கோலி கூறும் பொழுது ” நான் அந்த தலைசிறந்த மனிதர் சச்சின் டெண்டுல்கரை முதல்முறையாக இந்திய அணியில் சந்தித்த பொழுது, அவர் முன் குனிந்து நின்று வணங்கி வரவேற்றேன். இந்திய அணியில் இதுதான் அவருக்கு எல்லோரும் செய்யும் வழக்கம் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் சச்சின் பையா இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஏன் என்று கேட்டார். ஆனால் நான் இதற்கான உண்மை காரணத்தை கூறவில்லை”

இதையும் படிங்க : விராட் ரோஹித் விஷயத்தில் என்ன அவசரம் பாஸ்.. பவுலர்கள் மட்டும் சூப்பரா? – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

“ஏனென்றால் சச்சின் பையாவிடம் என்னை இப்படி செய்ய சொல்லி இர்பான் பதான் பாய், ஹர்பஜன் பஜ்ஜுபா, யுவி பா மற்றும் முனாப் படேல் பாய் ஆகியோர் சொல்லியிருந்தார்கள். அவர்கள் என்னை வைத்து பிராங்க் செய்திருக்கிறார்கள். எனவே நான் இதை எப்பொழுது அவரிடம் சொல்லவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -