விராட் ரோஹித் விஷயத்தில் என்ன அவசரம் பாஸ்.. பவுலர்கள் மட்டும் சூப்பரா? – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

0
168
Rohit

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் ஓய்வு குறித்து மற்றவர்கள் தற்பொழுது பேசிக் கொண்டிருப்பது மிகவும் சீக்கிரமானது என தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தோற்றது. வரலாறு காணாத தோல்வியை சொந்த மண்ணில் சந்தித்ததால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கிரிக்கெட் ஓய்வு குறித்து பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் காத்திருக்கும் செக்

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாட விட்டால், அவர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்கின்ற குரல்கள் எழுந்திருக்கின்றன.

சில முன்னாள் வீரர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் தாமாகவே இந்த வீரர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள் என்றும் கூறி வருகிறார்கள். ரோகித் சர்மா கேப்டன் ஆக இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு இதில் மிகப்பெரிய அழுத்தம் சேர்ந்து இருந்து வருகிறது. தற்பொழுது இது குறித்து தினேஷ் கார்த்திக் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

உங்களுக்கு என்ன அவசரம் பாஸ்?

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “உங்களுக்கு என்ன அவசரம் பாஸ்? ஒரு மோசமான தொடர் அமைந்ததும் உடனே முன்னணி வீரர்களின் ஓய்வு குறித்து பேச ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் இது மிகவும் சீக்கிரம் என்று நான் நினைக்கிறேன். இன்னும் ஒரு பத்து டெஸ்ட் போட்டிகள் வாய்ப்பு கொடுத்து அதில் அவர்கள் சரியாக விளையாடாவிட்டால் ஓய்வு குறித்து பேசலாம். ஆனால் இப்பொழுதே அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை”

இதையும் படிங்க : பாண்டிங் ஃபோன் பண்ணி சொன்ன… அந்த 3 வருட விஷயம்.. ரொம்ப ஆச்சரியமா இருந்தது – பிரப்சிம்ரன் சிங் பேட்டி

” எங்களுடைய பேட்மேன்கள் சுழல் பந்துவீச்சுக்கு சரியாக விளையாடவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. அதே சமயத்தில் எங்களுடைய சுழல் பந்துவீச்சாளர்களும் சரியான அளவில் பந்து வீசவில்லை. மேலும் டி20 கிரிக்கெட்டின் எழுச்சி உலக கிரிக்கெட்டில் தற்காப்பு பேட்டிங்கை பாதித்து இருக்கிறது. இருந்தபோதும் இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக மிகவும் மோசமாக போராடினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -