ஸ்டீவ் ஸ்மித் திட்டத்தின் முன் விராட் கோலி சரணடைந்து விட்டார்! – வாசிம் ஜாபர் கருத்து!

0
1188
Jaffer

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் , அதிக முறை ரஞ்சிக் கோப்பைகளை வென்றவருமான , வாசிம் ஜாபர் இந்திய அணியின் தோல்வி குறித்தும் , இந்திய அணியின் T20I சூப்பர்ஸ்டார் குறித்தும் பேசியுள்ளார் .

நடந்து முடிந்த இந்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் காயத்தால் வெளியேற , அவரது இடத்தில் இறக்கிவிடப்பார் சூர்யகுமார் யாதவ் . யாரும் எதிர்பாராத வகையில் அவரின் ஆட்டம் மோசமாக இருந்தது . மூன்று ஆட்டத்திலும் சந்தித்தித்த முதல் பந்தே அவுட்டாகி வெளியேறினார் . இதை பற்றி முன்னாள் வீரர்கள் பலரும் கருத்தை தெரிவித்து வருகிறார்கள் .

- Advertisement -

இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில்
” சூரியகுமார் யாதவை நம்பர் 5ல் அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தேன் . ஆனால் அவரை ஏழாவது இடத்தில் அனுப்பியது நிர்வாகத்திற்கு அவர் மீது குறைந்த நம்பிக்கையை காட்டுகிறது. இது ஒரு வீரரின் நம்பிக்கையைக் குலைக்கலாம், மேலும் ஒரு தொடரில் ஒரு வீரர் மூன்று முறையும் கோல்டன் டக் ஆகியதை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை, மேலும் அவர் T20I பேட்டர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,
அவருக்கு என் ஆதரவுகள் உள்ளன ” என்று கூறினார் .

மேலும் வாசிம் ஜாபர் கூறுகையில்
” அவர் ஐந்தாவது இடத்தில் வந்திருக்க வேண்டும், அவர் நன்றாக ஆடியிருந்தால் , அது வேறு கதையாக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் அக்சரின் ரன் அவுட் மிகவும் முக்கியமானது. ஸ்டீவ் ஸ்மித்தின் திட்டத்தின் முன் விராட் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ” என்று கூறினார் .

ஆஷ்டன் அகார் பற்றி வாசிம் ஜாபர் கூறுகையில் ” ஆஷ்டன் அகர் தனது கடைசி ஓவர் வரை ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை, மேலும் அவரது இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க இந்தியாவை பின்னுக்குத் தள்ளபட்டது . இந்த விக்கெட்டில் ஆஷ்டன் அகர் அற்புதமாக பந்துவீசியதை உணர்ந்தேன், இந்திய வீரர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். அவரது கடைசி ஓவரில் இந்தியா ஓரிரு ரண்கள் மட்டும் எடுத்தால் போதும் , என்று விளையாடியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கோஹ்லி அந்த இன்சைட்-அவுட் ஷாட்களை முயற்சி செய்தார், அது லாங்- ஆன் ஃபீல்டருக்கு சென்றது.
அந்த ஷாட்டை மீண்டும் முயற்சிப்பது கோஹ்லியின் இயலாமையை வெளிகாட்டியது . ஏனென்றால் அவர் எவ்வளவு நன்றாக சேஸ் செய்வார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த ஓவர் முக்கியமானதாக இருந்தது ” என்று கூறினார் .

- Advertisement -

ஆகர் பற்றி மேலும் கூறுகையில்
“ஒரு சில டாட் பால்களை வீசியதன் மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்தார். அவர் கேஎல் ராகுலையும் , கட்டுக்குள் வைத்திருந்தார். கோஹ்லியினால் ஷாட்டுகளுக்கு போக முடியவில்லை . மேலும் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க , அது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் விஷயங்கள் வெகுவாக மாறியது ” என்று கூறினார் .