ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட துயரம்.. முதல் முறை மௌனம் கலைத்த விராட் கோலி.. உருக்கமான பேச்சு

0
16
Virat

இந்த ஆண்டு ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவத்திற்கு முதல் முறையாக விராட் கோலி மௌனம் கலைத்திருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி முதல் முறையாக கைப்பற்றியது. உடனடியாக அடுத்த நாளை சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.

- Advertisement -

ஆர்சிபி அணி நிர்வாகம் கருத்து

இந்த துயர சம்பவத்திற்கு பிறகு ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. தொடர்ந்து பல மாதங்களாக இரண்டு தரப்புமே மௌனம் காத்து வந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் இந்த மௌனம் துயரத்தின் அடையாளம் என அறிக்கை வெளியிட்டது.

மேலும் ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் தங்கள் அணியை விற்று விட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பதினெட்டாவது ஆண்டில் முதல்முறையாக கோப்பையை வென்ற தருணம் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டியது, ஆனால் ஏற்பட்ட துயரச் சம்பவம் மொத்தமாக அதை சோகமாக மாற்றி விட்டது.

- Advertisement -

விராட் கோலி மௌனம் கலைப்பு

இத்துடன் விராட் கோலி லண்டன் செல்வதற்காக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என சில செய்திகளும் பரவின. எனவே விராட் கோலி இது குறித்து வாய் திறந்து பேசுவார் என பல நாட்களாக பலரும் காத்திருந்தார்கள். இந்த நிலையில் இது குறித்து விராட் கோலி பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : கம்பீர் கை வைக்கப் போறது சாம்சன் மேலே கிடையாது.. இந்த ஆச்சரியம் காத்துட்டு இருக்கு – முகமது கைப் தகவல்

இது குறித்து பேசி உள்ள விராட் கோலி “ஜூன் நான்காம் தேதி நடைபெற்ற துயரமான சம்பவத்திற்கு உங்களை எதுவும் தயார் படுத்த முடியாது. எங்கள் அணியின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டிய தருணம் மிகவும் சோகமாக மாறியது. நாங்கள் இறந்த எங்கள் ரசிகர்களுக்காகவும் காயம் அடைந்த ரசிகர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வருகிறோம். உங்களுடைய இழப்பு இப்போது எங்களுடையது. நாங்கள் அனைவரும் ஒன்றாக பொறுப்பு மற்றும் மரியாதை உடன் முன்னேறுவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -