விராட் கோலி கே.எல்.ராகுல் நிலைமையை மதித்து விளையாடி இருக்க வேண்டும் – ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கருத்து!

0
2005
Rohitsharma

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி , ஆரம்பத்தில் டெஸ்ட் தொடரை இழந்தாலும் , கேப்டன் ஸ்மித் தலைமையில் களமிறங்கி ஒருநாள் தொடரை வென்று சாதித்தது .

மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும் , விசாகபட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றிருந்தன. இதனை தொடர்ந்து , தொடர் யாருக்கு என்று நிர்ணயிக்கும் , மூன்றாவது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது . இதில் கேப்டன் ஸ்மித்தின் வலுவான திட்டங்களால் , ஆஸ்திரேலிய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது .

- Advertisement -

இந்த போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா , அக்‌ஷர் பட்டேலை ஏன் சூர்யகுமார் யாதவ்க்கு முன் அனுப்பினோம் என்ற கேள்விக்கும் பதிலளித்தார் .

ரோகித் சர்மா கூறுகையில்
“கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி பேட்டிங் செய்யும் போது, ​​அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை ரொட்டேட் செய்து கொண்டிருந்தார்கள் . சூர்யகுமார் யாதவ் உண்மையில் 5 ஆம் இடத்தில் உள்ளே செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில பந்துகள் திரும்பும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த வலையில் எங்கள் வலது கை ஆட்டக்காரர்கள் சிக்கிக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை, அதனால்தான் நாங்கள் இடது கை வீரரான அக்சர் ஐ அனுப்ப விரும்பினோம்” என்று கூறினார் .

மேலும் அவர் பேசுகையில் “அக்சர், நல்ல ஃபார்மில் இருப்பதால், நாங்கள் அவரை முன்னதாக உள்ளே அனுப்பி சில ஓவர்கள் பேட் செய்து ஸ்பின்னர்களை அட்டாக் செய்யலாம் என்று நினைத்தோம் . அதனால்தான் நாங்கள் அவரை முன்னதாக அனுப்பினோம் . ஹர்திக், சிறந்த வீரர் என்பதால் அவரை 6ஆம் இடத்தில் வைத்துக் கொண்டு, சூர்யகுமார் யாதவ்க்கும் , ஜடேஜாவுக்கும் இடையே யாரை களமிறக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்திருந்தோம் ” என்று கூறினர் .

- Advertisement -

ரோகித் சர்மா , மேலும் இந்த திட்டம் குறித்து பேசுகையில் ” ஆக்சரை 5ஆம் இடத்தில் அனுப்பும் தந்திரம் பலனளிக்கவில்லை. வந்த வேகத்தில் அக்சர் ( 2 )ரன்னில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி (54), ராகுல் (32) மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்து 270 என்ற இலக்கை இந்தியாவுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் விரைவான விக்கெட்டுகள் இந்தியாவின் நம்பிக்கையை செலுத்தியது ” என்று கூறினார் .

மேலும் ஆடுகளத்தின் தன்மை பற்றி
பேசும்போது ” ராகுல் மற்றும் விராட் கோலி ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்க்கு முயன்றனர். ஆடுகளம் சுழற்பந்துக்கு சில வகையான உதவிகளைப் பார்க்கும்போது, ​​ஒவ்வொரு பந்திலும் உங்களால் ஷாட்களை ஆட முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் இந்த நிலைமைகளையும் மதிக்க வேண்டும் ”என்று கூறினார் .