விராட் புத்திசாலித்தனமா இதை மட்டும் செஞ்சா.. 2025 ஐபிஎல் கப் ஆர்சிபிக்கு தான் – ஏபி டிவில்லியர்ஸ் கணிப்பு

0
83
Virat

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி புத்திசாலித்தனமாக தனது பேட்டிங் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், ஆர்சிபி அணி கோப்பையை மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

தற்போது ஆர்சிபி அணியில் பில் சால்ட், டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டன் என அதிரடி வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் ஜிதேஷ் சர்மா என சிறந்த இந்திய வீரர்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒட்டு மொத்தத்தில் பேட்டிங் யூனிட் வலிமையாக காணப்படுகிறது.

- Advertisement -

ஆர்சிபி அணியின் மையப் பிரச்சினை

தற்போது ஆர்சிபி அணிகள் நல்ல பேட்டிங் யூனிட் இருப்பது போலவே நல்ல வேகப்பந்து வீச்சு யூனிட்டும் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் சாகல், குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற இம்பாக்ட் தரக்கூடிய முக்கிய சுழல் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்பதுதான் ஒரு குறையாக இருக்கிறது.

இதை சரி கட்டுவதற்கு சுழல் பந்துவீச்சில் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா இருக்கிறார். ஜடேஜா போல மிக வேகமாக நான்கு ஓவர்களை வீசி முடிக்க கூடியவராகவும், பந்துவீச்சில் சிக்கனமாக இருக்கக்கூடியவராகவும் இவர் இருப்பது ஒருவகையில் ஆர்சிபி அணிக்கு பலமாகவே அமைகிறது. மேலும் இவரால் பேட்டிங் செய்ய முடிவது கீழ் வரிசையில் அனுபவத்தை சேர்க்கிறது.

- Advertisement -

விராட் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “இந்த முறை விராட் கோலி மீது அழுத்தத்தை பில் சால்ட் எடுத்து விடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஆரம்பம் முதல் மிகவும் அதிரடியாக செல்லக்கூடிய ஒரு வீரர். மேலும் இந்த அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அதிரடியாக விளையாட கூடியவர்கள்”

இதையும் படிங்க : சச்சினுக்கு எதிரா தோனி பந்தை என்கிட்ட கொடுத்தார்.. ஆனா ஹசிதான் அதை பேசினார் – அஸ்வின் பேச்சு

“ஆர்சிபி அணியில் அதிரடி வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால், விராட் கோலி ஒரு முனையில் பொறுமையாக விளையாடி விக்கெட் சரிவு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர் முன்பு போல தனது வழக்கமான ஆங்கர் ரோல் பேட்டிங் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக பல இடங்களில் விளையாடும் பொழுது விக்கெட் சரிவை நிறுத்தி அணியை வெற்றிக்கு எடுத்துச் செல்ல முடியும். விராட் கோலி புத்திசாலித்தனமாக இந்த அணுகுமுறைக்கு மாற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -