இந்திய கிரிக்கெட்

விராட் கோலிய அப்படி சொல்றது.. எனக்கு கேட்டாலே எரிச்சலா இருக்கு – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

இந்திய மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்த விராட் கோலி என்ன மாதிரியான சாதனைகளை செய்தார் என்று பார்ப்பது குறித்து ஏபி.டிவிலியர்ஸ் காட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்ட பிறகு, மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் பொறுப்பேற்று வழி நடத்திய விராட் கோலி ஒரு ஐசிசி தொடர்களை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கேப்டன்

விராட் கோலி தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு தகுதி பெற்று நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

அதே சமயத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை ஊக்குவித்து, வெற்றியை நோக்கி விளையாடுவது, உடல் தகுதியை கடுமையான முறையில் பராமரிப்பது போன்ற அவற்றை கொண்டு வந்து, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சத்திற்கு எடுத்துச் சென்ற மிகச்சிறந்த கேப்டனாக விராட் கோலி இதுவரையில் இருக்கிறார்.

- Advertisement -

எரிச்சலாக இருக்கிறது

இதுகுறித்து முதலில் பேசிய ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” விராட் கோலி கேப்டனாக இருந்த பொழுது அவருக்கு எந்த மாதிரி அணி கிடைத்தது என்பதை வைத்து பார்த்தால், அவர் மூன்று முதல் நான்கு ஐசிசி தொடர்களை வென்றிருக்க முடியும். இப்படி வெல்ல முடியாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு மிகச் சிறந்த அணி கிடைத்திருந்தது”

இதையும் படிங்க : 16 ஃபோர் 15 சிக்ஸர்.. வைபவ் சூரியவன்சி வெறியாட்டம்.. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக சாதனை – விஜய் ஹசாரே டிராபி 2025

இதுபற்றி ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “மக்கள் எப்பொழுதும் ஒரு கேப்டனை அவர் உலகக் கோப்பையை வென்று இருக்கிறாரா என்பதை மட்டும் வைத்து மதிப்பிடுவது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. ஒரு கேப்டன் உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பதால் அவரை பயனற்றவர் என்று சொல்வது நியாயமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by