விராட் கோலிக்கு கேப்டன் பதவி தந்திருக்கனும்.. சரியாக கையாளவில்லை.. ரவி சாஸ்திரி கருத்து

0
76

இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிந்த உடனே விராட் கோலியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன் என்று கூறியுள்ளார். கோலி, 2025 மே மாதம் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வுக்கு பின்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு குறித்த விவாதங்களைத் தூண்டியது. குறிப்பாக, இந்திய அணி ஜூன் 20 முதல் ஹெடிங்லேயில் இங்கிலாந்துக்கு எதிராக முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது, இதில் சுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

- Advertisement -

எனக்கு வருத்தமளிக்கிறது:

இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, “கோலி இப்படி விடைபெற்றது எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த ஓய்வு முடிவு இன்னும் நன்றாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும், மேலும் சரியான தொடர்பு இருந்திருக்க வேண்டும். எனக்கு இதில் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு உடனடியாக அவரை கேப்டனாக நியமித்திருப்பேன்,” என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான பயிற்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கோலியுடன் இணைந்து அவர் வலுவான கூட்டணியை உருவாக்கினார். 2014 முதல் 2016 வரை, பின்னர் 2017 முதல் 2021 வரை இருவரும் இணைந்து பணியாற்றினர். இந்த காலகட்டத்தில் இந்திய அணி பல மைல்கற்களை எட்டியது.

- Advertisement -

கோலியின் சரிவு

ரவி சாஸ்திரி தலைமையில், 2019 ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது மற்றும் 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தது.கோலி 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஜமைக்காவின் கிங்ஸ்டனில் டெஸ்ட் அறிமுகமானார். பின்னர், இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக உருவெடுத்தார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: தடுமாறும் ஆஸ்திரேலியா.. வாய்ப்பை தவறவிட்ட தென்னாப்பிரிக்கா

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் கோலியின் டெஸ்ட் பார்ம் கணிசமாக வீழ்ச்சியடைந்தது. இந்தக் காலகட்டத்தில் அவரது பேட்டிங் சராசரி 30.72 மட்டுமே. மூன்று சதங்களும் ஒன்பது அரைசதங்களும் மட்டுமே அடித்தார். மொத்தமாக, 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை வெறும் 770 ரன்கள் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த கோலி, தற்போது 50 ஓவர் வடிவத்தில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடுவதில் கவனம் செலுத்துகிறார்.

- Advertisement -