இந்திய கிரிக்கெட்

நான் துணை கேப்டனா.. தோனி கிட்ட இதபத்தி பேசுறப்போ.. என்னை இப்படித்தான் நினைப்பார் – விராட் கோலி சுவாரசியம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் விராட் கோலி இணைந்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தபோது தான் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்து விராட் கோலி சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தனது கேப்டன் பதவியில் இருந்து விடுபட, அவருக்கு பதிலாக விராட் கோலி இடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. விராட் கோலியும் இந்திய அணியை தனது கேப்டன் பதவி மூலமாக நல்ல நிலையிலேயே வழி நடத்தினார். மேலும் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பு குறித்து சில நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக் கொண்டார்.

தோனி கேப்டனாக இருந்தபோது துணை கேப்டனாக இருந்து விராட் கோலி, அவரிடம் ஒவ்வொரு போட்டியின் மூலமாகவும் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார். தலைமை பொறுப்பு வீரர்களை வழிநடத்தும் விதம், கேப்டனாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பல விஷயங்களை தோனியின் மூலமாக விராட் கோலி கற்றுக் கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் போட்டியில் ஒவ்வொரு ஓவரின் போதும் தோனியிடம் ஏதாவது விவாதித்து கொண்டே இருப்பேன் என விராட் கோலி பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஏதாவது பேசிட்டே இருப்பேன்

இதுகுறித்து விராட் கோலி கூறும் போது ” தோனி கேப்டனாகவும், நான் துணை கேப்டனாகவும் இருந்தபோது போட்டியின் ஒவ்வொரு ஓவரின் போதும் நான் அவரது காதருகே சென்று, நாம் ஒரு பீல்டரை அங்கே வைத்தால், டீப் மிட் விக்கட்டுக்கு ஒன்று, லாங் ஆன் திசையில் ஒன்று, அந்த திசைக்கு கேட்ச் சென்றால் நாம் வெல்லலாம்’ என்று தோனியிடம் கூறுவேன். அப்போது அவர் இது ஒரு பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது என்று அவரது முகபாவனை இருக்கும்” என விராட் கோலி சிரித்துக் கொண்டே கூறினார்.

இதையும் படிங்க:தோனி தூங்கும்போது கூட இதை செய்ய மாட்டார்.. வித்தியாசமான குணம் கொண்ட மனிதர் – சிஎஸ்கே முன்னாள் வீரர் பேட்டி

விராட் கோலி மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் 2011ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையிலும் அதற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையில் ஐசிசி தொடரை வெல்லா விட்டாலும் இந்திய அணிக்காக விராட் கோலி தனது சிறந்ததை கொடுக்க ஒருநாளும் தவறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts