ஒரே ஒரு ரன்னில் ரோகித்தை தாண்டி விராட் சாதனை.. மேலும் சச்சின் ஜெயசூர்யா ரெக்கார்டுகள் காலி – முழு விபரங்கள்

0
125
Virat

நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஆட்டத்தில் ஆகாமல் 65 ரன்கள் குவித்து, மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்று பல சாதனைகள் படைத்திருக்கிறார்.

தற்போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி, மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக தென் ஆப்பிரிக்க தொடரில் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

மிரட்டும் விராட் கோலி அணுகுமுறை

தற்போது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் விராட் கோலி மொத்தம் 11 சிக்ஸர்கள் கிடைத்திருக்கிறார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அதிக சிக்ஸர்கள் அடித்த தொடராக இது அமைந்திருக்கிறது. இது அவர் தற்போது அதிரடியான அணுகுமுறையை கையில் எடுத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. மேலும் இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவராக விராட் கோலி 651 ரன்கள் எடுத்திருக்கிறார். ரோகித் சர்மா 650 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று போட்டி முடிந்த பிறகு பேசி இருந்த விராட் கோலி மனதளவில் தான் சுதந்திரமாக உணர்வதாகவும், மேலும் தான் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இப்படி விளையாடவில்லை எனவும், இதேபோல சிக்ஸர்கள் அடித்து அதிரடியாக விளையாடினால் அது அணிக்கு பெரிய அளவில் நன்மையாக இருக்கும் என தனக்குத் தெரியும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் பல சாதனைகள்

நேற்று தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சச்சினை தாண்டி முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிக தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சனத் ஜெயசூர்யாவை தாண்டி சாதித்திருக்கிறார்.

ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகள்:

20- விராட் கோலி
19- சச்சின் டெண்டுல்கர்
17- ஷகிப் அல் ஹசன்
14-ஜாக்ஸ் காலிஸ்
13- சனத் ஜெயசூர்யா
13- டேவிட் வார்னர்

இதையும் படிங்க: நாங்க ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம் இதுதான்.. சவுத் ஆப்பிரிக்கா சும்மா கிடையாது – கேப்டன் கேஎல் ராகுல் விளக்கம்

ஒருநாள் போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருதுகள்:

15-சச்சின் டெண்டுல்கர்
12- விராட் கோலி
11- சனத் ஜெயசூர்யா
9- ஷான் போலாக்
8- கிறிஸ் கெய்ல்

- Advertisement -