நாங்க ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம் இதுதான்.. சவுத் ஆப்பிரிக்கா சும்மா கிடையாது – கேப்டன் கேஎல் ராகுல் விளக்கம்

0
293
Rahul

நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது குறித்து கேப்டன் கேஎல்.ராகுல் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் இந்திய அணி வென்றது முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் கடந்த 20 போட்டிகளாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் டாஸ் வெல்லாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிக்கோள் நிறைவேறிய தொடர்

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு 89 பந்தில் 106 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக டெம்பா பவுமா 67 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். இறுதியாக 270 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 75 ரன் ஜெய்ஸ்வால் 116 ரன், விராட் கோலி 65 ரன் எடுத்தார்கள். இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்தத் தொடரில் இளம் வீரர்கள் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் முழுமையாக வாய்ப்பு பெற்றார்கள். மேலும் இருவருமே ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தங்கள் முதல் சதத்தை அடித்து வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் ஒரே வடிவத்தில் மட்டுமே விளையாடும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார்கள். இந்திய அணி இரண்டாவதாக பந்து வீசியும், பேட்டிங் செய்தும் இரண்டு மாதிரியாகவும் வென்று இருக்கிறது. மொத்தத்தில் சிறப்பான தொடராக இந்திய அணிக்கு அமைந்திருக்கிறது.

- Advertisement -

பெருமையாக கருத மாட்டார்கள்

இது குறித்து கேப்டன் கேஎல்.ராகுல் பேசும்பொழுது ” நான் டாஸ் வென்றது குறித்து எனது அணி பெருமையாக நினைத்திருக்காது. முதல் இரண்டு போட்டிகள் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது. இந்த மூன்றாவது போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர்களை கடினமான அவுட் ஃபீல்டில் விடாதது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எதிரணியின் விக்கெட்டுகளை கொத்தாக கைப்பற்றினோம். ஒரு அணி கடினமாக விளையாடி 400 ரன்கள் எடுக்கலாம் அல்லது விக்கெட்டுகளை இழக்கலாம் என்பது எங்களுக்கு தெரியும். பிரசித் முதலிலும் இரண்டாவது குல்தீப்பும் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்”

இதையும் படிங்க :நான் புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும்.. இந்த தப்பை செய்து தொடரை இழந்து விட்டோம் – டெம்பா பவுமா பேச்சு

“இந்த ஆடுகளத்தில் புது பேட்ஸ்மேன் வந்து உடனே நல்ல மாதிரியாக விளையாட முடியாது. எனவே சதம் அடித்திருந்து செட்டாகி இருந்த குயிண்டனை பிரசித் கிருஷ்ணா அவுட் ஆகியது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் அழுத்தத்தை எப்படி கையாண்டு இருக்கிறோம் என்பதுதான். நாங்கள் மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறோம். இந்த தொடர் முழுவதும் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தார்கள். ஒரு போட்டி எங்கள் வழியில் செல்லவில்லை. ஆனாலும் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் திட்டங்களில் கவனம் செலுத்தினோம். அதையே இந்த போட்டியில் செயல்படுத்தி வென்றோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -