தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 53 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் நடப்பு தொடரில் மட்டும் தொடர்ந்து இரண்டாவது சதத்தை அவர் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் 22 ரன்களும், ரோகித் சர்மா 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
சச்சின் சாதனை முறியடிப்பு:
இந்த நிலையில் ருதுராஜ் ஜோடி சேர்ந்து விளையாடியவிராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக தன்னுடைய இன்னிங்சை சிக்சர் மூலம் ரன் கணக்கை தொடங்கி அனைவரையும் விராட் கோலி ஆச்சரியப்படுத்தினார். இது அவருடைய சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் சிக்சர் அடித்து தனது கணக்கை தொடங்கியது இதுவே இரண்டாவது முறையாகும்.
தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 47 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்கள் மேல் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார்.
53வது சதம்:
சச்சின் 25 முறை அடித்த நிலையில் ,விராட் கோலி 26 முறை அடித்திருந்தார். அரை சதம் அடித்த நிலையில் விராட் கோலி தனது விக்கெட்டை பறி கொடுக்காமல் தொடர்ந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.பவுண்டரி, சிக்ஸர் என பறக்க விட்ட அவர் 90 பந்துகளில் தனது 53 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இதையும் படிங்க: 2023 WC செமி பைனல் பிறகு.. ருதுராஜ் தரமான சம்பவம்.. விராட்டை நிற்க வைத்து சதம்.. மாஸ் பேட்டிங்
அப்போது ஏழு பவுண்டரி,இரண்டு சிக்ஸர்களை 111 ஸ்ட்ரைக் ரோட்டுடன் விராட் கோலி சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி சதம் அடித்தவுடன் ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று கொண்டாடியது. விராட் கோலி வழக்கம் போல் துள்ளி குதித்து தனது சதத்தை கொண்டாடினார்.சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 12 முறை தொடர்ந்து இரண்டு சதங்களை விராட் கோலி அடித்திருக்கிறார்.






