நேற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆர்.சிபி அணி வென்று ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி குறித்து விராட் கோலி மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியும், பதிவிட்டும் இருக்கிறார்.
மேலும் ஆர்சிபி அணிக்காக சிறப்பான முறையில் நீண்ட காலம் விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் இருவரும் நேற்றைய இறுதி போட்டியை பார்ப்பதற்கு மைதானத்திற்கு ஆர் சி பி அணிக்காக வந்திருந்தார்கள்.
உயிரைக் கொடுத்து விளையாடினோம்
இந்த நிலையில் இவர்கள் குறித்து பேசி உள்ள விராட் கோலி “நாங்கள் மூன்று பேரும் எங்களுடைய உச்சகட்ட ஃபார்ம் இருந்த ஆண்டுகளை ஆர்சிபி கோப்பையை வெல்வதற்காக அர்ப்பணித்திருக்கிறோம். அது அப்போது கை கூடாமல் போனது. இந்த கோப்பை ஓய்வு பெற்றுவிட்ட இவர்களுடையதும் கூட. இவர்கள் தங்கள் முழு மனதையும் உயிரையும் கொடுத்து இந்த அணிக்கு விளையாடினார்கள்”
“2014 ஆம் ஆண்டு முதல் அனுஷ்கா ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் பெங்களூரு வந்து கொண்டிருக்கிறார். 11 வருடங்களாக அவர் பல கடினமான போட்டிகளை பார்த்திருக்கிறார். அப்படிப்பட்ட நேரங்களில் அவர் எனக்கு துணையாக இருந்திருக்கிறார். மேலும் அவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். எனவே இந்த வெற்றி அவருக்கும் மிகவும் முக்கியமானது”
இந்த சீசனை மறக்க மாட்டேன்
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்து பதிவில் “இந்த அணி தான் கனவை நனவாக்கியது. இது நான் என்றும் மறக்க முடியாத ஒரு சீசன். கடந்த இரண்டரை மாதங்களாக நான் இந்த பயணத்தை முழுமையாக ரசித்தேன். கடினமான எந்த காலகட்டத்திலும் எங்களை விட்டு விலகாத ஆர் சி பி ரசிகர்களுக்காக இந்த கோப்பையை சமர்ப்பிக்கிறேன். இது இத்தனை ஆண்டுகளாக உடைந்த இதயங்களுக்காகவும், ஏமாற்றங்களுக்கும் ஆறுதலாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : 2025 ஐபிஎல்.. மொத்தம் 14 அவார்டுகள்.. விருதுகள் மற்றும் பரிசுத்தொகை முழு விபரம்.. சாய் சுதர்சன் அசத்தல்
மேலும் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதை அடுத்து பெங்களூரில் சட்டசபையில் இருந்து சின்னசாமி மைதானம் வரையில் ரோட் ஷோ நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. நேற்று இரவு முதல் பெங்களூர் நகரமே திருவிழா போல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.






