நான் கிரிக்கெட்டை விட்டு விலக.. இந்த 4 விஷயம் என்னை விட்டு போகணும்.. அதுவரை தொடரும் – விராட் கோலி

0
190

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி கிரிக்கெட் குறித்து சில முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட் குறித்து விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி முடித்திருக்கிறார். இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் கோப்பையையும் வெற்றிகரமாக கைப்பற்றிய உள்ள நிலையில் மற்ற இந்திய வீரர்களும் ஐபிஎல் அணிகளில் இணைந்து தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விராட் கோலி நேற்று ஆர்சிபி அணியில் இணைந்து இருக்கும் நிலையில் விரைவில் தனது பயிற்சி துவங்க இருக்கிறார்.

இந்த முறை பெங்களூர் அணி ரஜத் பட்டி தாரை கேப்டனாக அறிவித்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து அதற்கான வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி தனது கிரிக்கெட் குறித்தும், கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்

இதுகுறித்து விராட் கோலி கூறும் போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நான் நன்றாக ஸ்கோர் செய்தேன். அதற்குப் பிறகு நிலைமைகளை அப்படியே எடுத்துக்கொண்டு செல்ல முயற்சித்தேன். ஆனால் அது எனக்கு சரியாக நடக்கவில்லை. எனவே அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாக விடுவது நல்லது. குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள், உட்கார்ந்து பேசுங்கள், அனைத்தும் அமைதியாகும். என் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசினால் சுத்தமான மகிழ்ச்சி, இன்பம், போட்டித் தொடர் மற்றும் விளையாட்டின் மீதான அன்பு இந்த நான்கும் இருக்கும் வரை நான் தொடர்ந்து விளையாடுவேன்.

இதையும் படிங்க:66 ரன்.. ஹர்மன் ப்ரீத் பொறுப்பான ஆட்டம்.. மாரிசான் கேப் போராட்டம் வீண்.. WPL பைனல்.. டெல்லியை வீழ்த்தி எம்ஐ சாம்பியன்

பொதுவாக ஒவ்வொரு குழந்தையும் விளையாட்டை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் விளையாட்டு உங்களுக்கு சில நிமிடங்களில் கற்றுக் கொடுக்கும் பல விஷயங்களை மற்ற சூழ்நிலைகள் நீண்ட காலத்திற்கு கற்றுக் கொடுக்கும். ஏனென்றால் நீங்கள் உங்களை விரைவாக மாற்றியமைக்க வேண்டும். விரைவாக ஏமாற்றங்களை சமாளிக்க வேண்டும். ஏனென்றால் விளையாட்டு எப்போதும் உங்களுக்காக நிற்காது. எனவே ஒவ்வொரு குழந்தையும் ஏதேனும் ஒரு விளையாட்டை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்” என்று விராட் கோலி பேசி இருக்கிறார்

- Advertisement -