நான் பேட்டிங் செய்றப்ப பதட்டமா இருந்தது வாழ்க்கையில அப்பதான்.. மறக்க முடியாது – விராட் கோலி பேச்சு

0
433
Virat

தற்போது இந்திய கிரிக்கெட்டை தாண்டி உலகக் கிரிக்கெட்டிலும் மிக முக்கியமான வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருந்து வருகிறார். அவர் தனக்கு ஒரு முக்கியமான போட்டியில் பேட்டிங் செய்வதற்கு முன்னால் பதட்டம் இருந்தது உண்மையை கூறியிருக்கிறார்.

விராட் கோலி முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதற்கு அடுத்து 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டிலும், 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானர். தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

மேலும் விராட் கோலிக்கு இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பை தொடராக 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமைந்தது. இந்த உலகக்கோப்பை தொடரை சேவாக் உடன் இணைந்து விராட் கோலி மிகச் சிறப்பாக ஆரம்பித்திருந்தார்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டாக்காவில் விளையாடியது. சேவாக் 140 பந்தில் 175 ரன்கள் எடுக்க, விராட் கோலி அதிரடியாக விளையாடும் 83 பந்தில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அந்தப் போட்டியில் நான்கு விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்த இந்திய அணி, இறுதியாக 87 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

தற்பொழுது இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டாக்காவில் விளையாடிய போட்டி எனக்கு உலகக்கோப்பையில் முதல் போட்டி, எனவே எனக்கு பதட்டமாக இருந்தது. நான் பொய் சொல்ல மாட்டேன், உலகக் கோப்பை என்று வரும் பொழுது காற்றில் வித்தியாசமான உற்சாகம் இருக்கிறது. நான் அணியின் இளம் வீரனாக பெரிய ஜாம்பவான் வீரர்களுடன் விளையாட போகிறேன். எனவே என்னால் பதட்டத்தை உணர முடிந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில் இந்த 4 டீம் செமி பைனல் வரும்.. ஆனா இவங்க தான் பைனல் போவாங்க – கவாஸ்கர் கணிப்பு

அந்தப் போட்டிக்கு முந்தைய நாள் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் அப்படி பதட்டமாக இருந்தது ஒரு நல்ல அறிகுறி ஆகும். அது உங்களுக்கு நல்ல எச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் கொடுக்கிறது. நீங்கள் சூழ்நிலைகளை மறந்து விட்டு எல்லாவற்றுக்கும் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பித்து விடுவீர்கள். நான் விழிப்புடன் இருக்கவும் எனது திட்டங்களை சரியாக செயல்படுத்தவும் பதட்டம் எனக்கு உதவி செய்தது” என்று கூறி இருக்கிறார்.