நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா இன்னைக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி சதம் அடித்து வெற்றி பெற வைத்தார். மேலும் இந்த போட்டி குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணித்து தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 60 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் எடுத்தார். அந்த அணி நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது.
பெரிய கொண்டாட்டம் இல்லை
இந்த போட்டி குறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் போது “இந்த வெற்றியை பெரிதாக கொண்டாட போவது கிடையாது. ஏனென்றால் நாங்கள் பெற்ற இந்த புள்ளிகளின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். அணியில் வெற்றிக்கு இன்னும் பங்களிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வாக மட்டுமே இதை எடுத்துக் கொள்வோம். நான் சதம் அடிக்கிறேன் அடிக்கவில்லை என்பது முக்கியமில்லை போட்டியை முடித்து விடுவதுதான் முக்கியம்”
“நான் கடந்த இரண்டு போட்டிகளாக ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் வெளியில் இருந்து எனக்கு மக்களின் அழுத்தம் இருந்தது. இது என்னை நான் பணிவாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. மேலும் நமது விளையாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் தோல்விகளும் முக்கியமானதுதான் அதுதான் உங்கள் விளையாட்டை உச்ச நிலைக்கு எடுத்து வரும்”
இதில்தான் மகிழ்ச்சி
“நான் பேட்டிங் எந்த விதத்தில் செய்தேன் என்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த தேவையற்ற விஷயங்களை செய்யவில்லை. பந்தின் லென்த்தை மிகச் சரியாக கனித்தேன். நான் அடிக்க நினைத்த இடத்தில் அடித்து சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி”
இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சம்.. ஜாம்பவான் விராட் கோலி சாதனை.. கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க வாய்ப்பு
“இத்தனைக்கு பிறகும் என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருப்பது மகிழ்ச்சி மேலும் இந்த வடிவத்தில் சிறப்பாக இருப்பவர்களுடன் இன்னும் நான் போட்டியிட்டு கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. மேலும் நான் என் முழு மனதையும் கொடுத்து விளையாடு விரும்புகிறேன். ஏனென்றால் இது ஒரு நாள் முடிவுக்கு வரும். அதற்குள் நான் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






