நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி எட்டாவது வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஜாம்பவான் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ரகுவன்சி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி இந்த முறை நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த இரு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் இந்த போட்டியில் முதல் ரன் எடுத்த பிறகு தனக்கே உரித்தான பாணியில் அதை கொண்டாடிவிட்டு அதன் பிறகு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதியில் 60 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 105 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 5 பந்துகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இதன் மூலமாக பெங்களூர் அணி தனது 8வது வெற்றியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி t20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்கிற மைல் கல்லை எட்டி இருக்கிறார். உலக கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி 14,027 ரன்கள் குவித்து இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
இந்த தர வரிசையில் அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் 14562 ரன்கள் குவித்து இந்த தர வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலிக்கு இவரை முறியடிக்க கிட்டத்தட்ட 500 ரன்கள் தேவைப்படும் நிலையில் அதையும் விரைவாக முறியடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






