எதுக்கு 5 ஸ்பின் பவுலர்ஸா.? அதுக்கு விளக்கம் நான் தரேன்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன் ரோஹித்

0
993

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டியில் நாளை இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாட உள்ளன. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி மீதான விமர்சனங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா வங்கதேசம் முதல் போட்டி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளதால், சுழற்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அணியில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் கடைசியாக வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்திய அணியில் பந்து வீச்சு வரிசையில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 5 சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் துபாய் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. வேகப்பந்து வீச்சாளர்களும் அந்த ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எதற்காக ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் என்ற கேள்விக்கு தற்போது தகுந்த விளக்கம் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

எதற்காக அந்த ஐந்து பேர்

இதுகுறித்து ரோகித் சர்மா விரிவாக கூறும்போது “எங்களிடம் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை ஐந்து சுழற் பந்து வீச்சாளர்களாக பார்க்கவில்லை. ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் எங்களுக்கு பேட்டிங் ஆழத்தை கொடுக்கிறார்கள். ஒரு அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருந்தால் ஐந்து அல்லது ஆறு வேகப்பந்துவீச்சாளர்கள் என்று கூற மாட்டோம். மற்ற போட்டிகளில் விளையாடுவதை போலவே இந்த போட்டியில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க:பல வருஷம் ஆச்சு.. இப்பதான் ரியல் பாகிஸ்தானி பிளேயர பார்க்கிறேன்.. பாபர் அசாமையே மிஞ்சுவார் – அஸ்வின் புகழாரம்

இந்தியாவுக்காக விளையாடுவது நம் அனைவருக்கும் நிறைய அர்த்தம் தரும். சில நேரங்களில் சில வீரர்களை இழக்க நேரிடும். ஆனால் எங்களுக்கு சிறந்த வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்” என்று ரோஹித் சர்மா முடித்திருக்கிறார். அதாவது ரோஹித் சர்மா ஐந்து பந்துவீச்சாளர்கள் என்று பார்க்காமல் பேட்டிங் ஆழத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தனது முதல் போட்டியாக நாளை வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -