என்னோட பெருமை ஈகோவ இதுக்காக தள்ளி வச்சேன்.. ரோகித் டிராவிட்கிட்ட நொந்து போய் சொன்னேன் – விராட் கோலி பேட்டி

0
220
Virat

2024 டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விருந்தளித்து பாராட்டினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் பலர் பேசியிருந்தார்கள். இதில் விராட் கோலி டி20 உலக கோப்பையில் தன்னுடைய பேட்டிங்கில் எப்படியான சிரமத்தை சந்தித்தார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் துவக்க ஆட்டக்காரராக வந்த விராட் கோலி முதல் ஏழு ஆட்டங்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் அவர் மீது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் மிகுந்த நம்பிக்கை வைத்து இறுதிப் போட்டியில் அவர் கட்டாயம் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியிருந்தார்கள்.

- Advertisement -

அவர்களின் வாக்கை காப்பாற்றும் படியாக விராட் கோலி இறுதி ஆட்டத்தில் யாரும் விளையாடாத பொழுது தூண் போல நின்று 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் ஒரு முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனான உரையாடலின் போது பேசிய விராட் கோலி ” முதலில் நீங்கள் எங்களை அழைத்ததற்கு மிகவும் நன்றி. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் என்னுடைய நினைவில் எப்பொழுதும் இருக்கும். காரணம் நான் விரும்பிய வகையில் அணிக்காக நல்ல முறையில் விளையாட முடியவில்லை. நான் இது சம்பந்தமாக எனக்கும் அணிக்கும் நியாயமாக விளையாடவில்லை என்று ராகுல் பாயிடம் கூறிய பொழுது அவர் ‘சூழ்நிலை வரும்பொழுது நீங்கள் சிறப்பாக விளையாடுவீர்கள்’ என்று கூறினார்.

இறுதிப் போட்டியில் முதல் ஓவரில் நான் நான்கு பந்தில் மூன்று பவுண்டரிகள் அடித்த பொழுது ரோகித் சர்மாவிடம் ‘என்ன மாதிரியான விளையாட்டு இது! ஒரு நாளில் ஒரு ரன் கூட எடுக்க முடிவதில்லை. ஆனால் இன்னொரு நாளில் அதற்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறது’ என்று சொன்னேன். பிறகு மூன்று விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பொழுது, நான் சூழ்நிலைக்கு தகுந்தபடி சரணடைந்து விளையாட வேண்டியது இருந்தது. நான் அப்பொழுது அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்தேன்.

- Advertisement -

நான் அப்பொழுது அந்த ஜோனில் தள்ளப்பட்டதாக உணர்ந்தேன். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியா என்று கிளாசன் விக்கெட்டை கைப்பற்றாத பொழுது ஆட்டம் எங்களிடம் இல்லை என்று நினைத்தேன். பிறகு ஒவ்வொரு பந்தாக சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வந்தோம். இதை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன்.

இதையும் படிங்க : இந்திய டீம்ல.. இந்த 3 பசங்க ஆபத்தானவங்க.. நேர்ல பார்த்திருக்கேன் – ஜிம்பாப்வே கோச் பேட்டி

உங்களால் எல்லாம் முடியும் என்று நீங்கள் நினைக்கும் பொழுது, உங்களுடைய ஈகோ உங்களை ஓவர் டேக் செய்யும் பொழுது, நீங்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவீர்கள் என்பதை நான் உணர்ந்தேன். இதனால் நான் என்னுடைய ஈகோ மற்றும் என்னுடைய பெருமை எல்லாவற்றையும் அணிக்காக விலக்கி வைத்தேன். நாம் விளையாட்டை மதிக்கும் பொழுது விளையாட்டு நமக்கு மரியாதை கொடுக்கும். இது நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒன்று” என்று கூறி இருக்கிறார்.