பும்ரா இல்லை.. அந்த கேகேஆர் வீரர்தான் பவுலிங்கில் என்னை மிரட்டுனாரு – விராட் கோலி சுவாரசியமான தகவல்

0
261

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஐபிஎல்லின் தொடக்கத்தில் இசாந்த் சர்மாவை எதிர்கொண்ட விதம் குறித்து சில முக்கிய கருத்துக்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி சுவாரசிய தகவல்

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து மீதம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் வலுவான நிலையில் இருக்கிறது. இந்த முறை பெங்களூர் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வலுவான வீரர்களை எடுத்து சிறந்த முறையில் பிளேயிங் லெவலை கட்டமைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்.

அவரும் இசாமந்த் சர்மாவும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கும் நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடிய போது இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் எதிர்கொண்டு விளையாட தான் மிகவும் சிரமப்பட்டதாக விராட் கோலி சில சுவாசயமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். தற்போது ஜியோ சினிமாவிற்கு அளித்துள்ள பேட்டியில் இதுவரை எங்கேயும் சொல்லப்படாத கருத்துக்களை பிரத்தியேகமாக பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

அவரை எதிர்கொள்ள சிரமமாக இருந்தது

இது குறித்து விராட் கோலி கூறும் போது “இந்த சுவாரசியமான தகவலை நான் இதுவரை எங்கேயும் வெளியே பேசியதில்லை. இஷாந்த் சர்மாவும் நானும் எங்கள் முழு கிரிக்கெட்டை ஒன்றாக இணைந்து விளையாடி உள்ளோம். அதனால் அவரை நான் அதிக முறை எதிர் கொண்டு விளையாடி இருக்கிறேன். ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான அந்த முக்கிய ஆட்டத்தில் அவர் வேறு லெவலில் பந்து வீசுவதாக உணர்ந்தேன். அதுதான் அழுத்தம் என்பது ஆகும்.

இதையும் படிங்க:பவுலிங்கில் பலமான குஜராத் அணிக்கு இந்த சிக்கல் இருக்கு.. சரி செய்யலன்னா நிலைமை மோசமாயிரும் – ஆகாஷ் சோப்ரா

சூழல் என்பது அதுதான் நான் வலைகளில் அவரை எதிர்கொண்டு இருந்தால் நான் அவரது பந்துவீச்சில் மிரட்டப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால் அந்த போட்டியின் சூழ்நிலை மற்றும் அழுத்தம் காரணமாக அவரது எந்த பந்தையும் என்னால் அடிக்க முடியாது என்பதை உணர்ந்தேன். அந்த தொடரின் போது நாங்கள் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தோம். ஆனால் அப்போது விளையாட்டு குறித்து அதிகமாக பேச மாட்டோம். அவர் அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா தொடர் முடிந்து புதிய ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார், மேலும் சிறப்பான பார்மிலும் இருந்தார்” என்று விராட் கோலி பேசியிருக்கிறார்.

- Advertisement -