ஐபிஎல் டி20 கிரிக்கெட் லைவ் தொடரின் 23 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடுகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குஜராத் அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பேட்டிங்கில் வலுவான குஜராத் அணி
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
குஜராத் அணியை பொருத்தவரை பேட்டிங்கை விட அவர்களது பந்து வீச்சு பலமானதாக உள்ளது என்று பொதுவாக அந்த அணி குறித்துக் கூறப்படும். ஏனென்றால் பந்து வீச்சில் முகமது சிராஜ், சாய் கிஷோர், ரஷித் கான், ரபடா என நட்சத்திர வீரர்கள் அந்த அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குஜராத் அணி பந்துவீச்சில் பலமாக இருந்தாலும் அதில் ஒரு சிறிய சிக்கல் இருப்பதாக தனது கருத்துக்களை பேசி இருக்கிறார்.
குஜராத் அணியின் பிரச்சனை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் முதல் நான்கு பேர் நன்றாக பார்மில் இருக்கிறார்கள் என்று இப்போது நீங்கள் சொல்லலாம். சாய் சுதர்சன் தொடர்ந்து நன்றாக விளையாடுகிறார். கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜாஸ் பட்லர் பேட்டிங் வரிசையில் பலம் சேர்க்கிறார். பினிஷர் ரோலில் ரூதர் போர்டு வலுவாக இருக்கிறார். மேலும் கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக விளையாடியதால் அவர்களுக்கு இணையாக அவரும் பேட்டிங் வரிசையில் இணைகிறார்.
இதையும் படிங்க:மக்கள் ஐபிஎல்லை புறக்கணித்து.. பிஎஸ்எல் டி20 தொடருக்கு ஆதரவு தரும் காலம் விரைவில் வரும் – பாக் ஹாசன் அலி பேட்டி
ஆனால் அந்த அணியின் பந்துவீச்சில் ஐந்தாவது பவுலர் ஒரு முக்கிய பிரச்சனையாக தெரிகிறார். ஏனென்றால் கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரை இரண்டு ஓவர்கள் வீசவைத்து இசாந்த் சர்மா நான்கு ஓவர்கள் வீசாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வெளியே தெரியாமல் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அப்படி செய்யாத பட்சத்தில் இந்த பிரச்சனையை அப்பட்டமாக வெளியே தெரிகிறது. அவர்கள் அதற்கு அர்ஷத் கானை பயன்படுத்தினார்கள். அர்ஷத் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா தலா இரண்டு ஓவர்கள் வீசினார்கள் ஆனாலும் அது பலன் அளிக்கவில்லை” என்று அவர் பேசி இருக்கிறார்.






