இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னராக திகழும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக டி20 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் மகத்தான சாதனைகளை படைத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் பள்ளிப் பருவம் குறித்து அவரது ஆசிரியை விபா சச்தேவ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
விராட் கோலியின் பள்ளிப் பருவம்
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விராட் கோலி இதுவரை நான்கு அரை சதங்கள் அடித்து தனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் செயல்பாடு பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது 36 ஆவது வயதில் இருக்கும் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காகவும், பெங்களூர் அணிக்காகவும் கிரிக்கெட்டில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு இளைஞனின் ரோல் மாடலாக இருக்கும் விராட் கோலி பள்ளிப் பருவ நாட்களில் எப்படி இருந்தார் எனவும், அவரது கல்வி ஆர்வம் குறித்தும் விராட் கோலியின் பள்ளி ஆசிரியை விபா சச்தேவ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். விராட் கோலி எப்பவுமே பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் எனவும், நான் தான் இந்திய அணியின் அடுத்த சச்சின் என அவரது ஆசிரியர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நன்றாக படிக்கும் மாணவன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலியின் கண்கள் மிகவும் வெளிப்படையான தன்மை கொண்டது. பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் மிகவும் ஆர்வமாக பங்கேற்பார். மேடம் நான் தான் இந்திய அணியும் சச்சின் டெண்டுல்கர் என்பதுதான் விராட் கோலியின் வாயிலிருந்து அடிக்கடி வெளிப்படும் வார்த்தைகளாகும். அந்த நேரத்தில் அகன்ற கண்களைக் கொண்ட அந்த சிறுவனின் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியையும் பார்த்து சிரிப்பையும் ஆச்சரியத்தையும் எங்களுக்கு வர வைத்தது.
இதையும் படிங்க:சிஎஸ்கே மற்றும் எம்எஸ் தோனி நிச்சயமாக கிடையாது.. என்னை பொருத்தவரை பெஸ்ட் ஐபிஎல் கேப்டன், சிறந்த அணி இதுதான் – மனோஜ் திவாரி
விராட் கோலி எப்போதுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய ஒரு மாணவர் ஆவார். சராசரி மாணவனை விட ஒரு படி மேலே நன்றாக படிக்கக் கூடிய ஒரு மாணவர். ஒரு சில தேர்வுகளில் அவரது மதிப்பெண்கள் குறையும்போது ‘எனது பயிற்சியை முடித்துவிட்டு நான் திரும்பியதால்தான் தேர்வுக்கு தாமதமாக தயாரானேன்’ என்பது நாங்கள் அவரிடம் இருந்து அடிக்கடி கேட்கக் கூடிய ஒரு விஷயமாகும்” என அவரது ஆசிரியை கூறி இருக்கிறார்.






