இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி இந்தியாவை விட்டு லண்டனில் குடியேறியதற்கான உண்மையான காரணம் வெளிவந்துள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறிய விராட்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் விராட் கோலி தற்போது டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மட்டும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
முதல் பெண் குழந்தை ஏற்கனவே பிறந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி ஜோடி இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு லண்டனில் குடியேறி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விராட் கோலி குடியேறியதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இருப்பினும் கிரிக்கெட் போட்டிகளுக்காக விராட் கோலி அவ்வப்போது லண்டனில் இருந்து இந்தியா வர வேண்டியது கட்டாயமாக உள்ளது.
உண்மையான காரணம் இதுதான்
இந்த சூழ்நிலையில் பாலிவுட் நடிகை மாதிரி தீட்சித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நேனே, விராட் கோலி லண்டனில் குடி பெயர்ந்ததற்கான உண்மையான காரணத்தை கூறியிருக்கிறார். விராட் கோலியை பலமுறை சந்தித்து பேசி இருப்பதாக கூறிய ஸ்ரீ ராம், தங்கள் குழந்தைகளை ஊடக கவர்ச்சியில் இருந்து வெளியே வைத்திருக்க விரும்பியதாகவும், அவர்களுக்கு சாதாரண மற்றும் அமைதியான வளர்ப்பை கொடுக்க விரும்பியதாக விராட் கோலி நினைத்ததாகவும் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஜெயிச்சிட்டோம்னு ஓவரா ஆடுனா.. சிஎஸ்கே கதிதான்.. இனியாவது தோனி இதை செய்வார்னு நம்புறேன் – சிஎஸ்கே முன்னாள் வீரர் பேட்டி
இதுகுறித்து அவர் கூறும் போது “விராட் கோலி மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நாங்கள் அவரை பலமுறை சந்தித்திருக்கிறோம் அவர் மிகவும் ஒழுக்கமான ஒரு மனிதர். நான் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவோடு உரையாடிய போது அவர்கள் இதைத்தான் கூறினார்கள். அவர்கள் லண்டனுக்கு குடி பெயர்வது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இங்கு அவர்களது வெற்றியை அனுபவிக்க முடியாது. அவர்கள் செய்யும் எதுவும் கவனத்தை பெறும் என்பதால் இதிலிருந்து கடந்து செல்ல அவர்கள் விரும்பியதை பாராட்டுகிறோம். விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் அழகான மனிதர்கள், அவர்கள் தங்களது குழந்தைகளை சாதாரண முறையில் வளர்க்க விரும்புகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.






