கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஓடிஐ ரேங்க் பட்டியலில் விராட் கோலி ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி அசத்திய அயர்லாந்து பேட்ஸ்மேன்; டாப் 10 லிஸ்ட் உள்ளே!

ஐபிஎல் தொடர் நடந்து வருவதால் உலகக் கிரிக்கெட் தற்பொழுது முடங்கி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரின் ஆதிக்கம் உலகக் கிரிக்கெட்டில் நீடிக்கிறது!

- Advertisement -

ஐபிஎல் தொடர் முடிந்ததும் மிகப்பெரிய தொடர்களாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்கள் நடக்க இருக்கின்றன!

இதன் காரணமாக ஐபிஎல் முடிந்ததும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் பங்கேற்காத பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் பங்களாதேஷில் ஒருநாள் தொடரில் விளையாடின.

- Advertisement -

இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஒரு சதத்துடன் அயர்லாந்து அணியின் ஹாரி டெக்டர் 206 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் இன்று வெளியிடப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் அவர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் முந்தி ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் டாப் 10 பேட்ஸ்மேன் லிஸ்ட் ;

பாபர் ஆஸம் 886 புள்ளிகள்

ராஸி வாண்டர் டெசன் 777 புள்ளிகள்

பக்கார் ஜமான் 755 புள்ளிகள்

இமாம் உல் ஹக் 745 புள்ளிகள்

சுப்மன் கில் 738 புள்ளிகள்

டேவிட் வார்னர் 726 புள்ளிகள்

ஹாரி டெக்டர் 722 புள்ளிகள்

விராட் கோலி 719 புள்ளிகள்

குயின்டன் டி காக் 718 புள்ளிகள்

ரோகித் சர்மா 707 புள்ளிகள்

- Advertisement -
Published by