விராட் ரோகித் ஹர்திக்.. இந்த 3 பேருமே என்னை இந்த மாதிரி ஸ்லெட்ஜிங் செய்திருக்காங்க – தினேஷ் கார்த்திக் சுவாரசிய தகவல்

0
546
DK

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அவருக்கு கடைசி ஐபிஎல் ஆண்டு நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியங்களை கொடுப்பதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தன்னை ஸ்லெட்ஜிங் செய்த இந்திய வீரர்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்தாலும் கூட பெரிய அளவில் வீரர்களை எதுவும் வம்பிழுக்க மாட்டார். நகைச்சுவையாக கூட எதுவும் பெரிதாக பேசி பார்த்தது கிடையாது. பந்துவீச்சாளர்களுக்கு ஐடியா கொடுப்பதை மட்டுமே அவர் செய்வார்.

- Advertisement -

அதே சமயத்தில் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் விளையாடும் பொழுது அவரை இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நட்பு ரீதியாக ஸ்லெட்ஜிங் செய்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” நான் ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு முறையும், விராட் கோலி என்னை கேட்ச் பிடித்தார் என்றால், அவர் வாயிலிருந்து கட்டாயமாக பென் ஸ்டோக்ஸ் என்கின்ற வார்த்தை வரும். இது ஜாலியாக சென்ட் ஆப் செய்கின்ற முறைதான்.

- Advertisement -

இதே போல நான் பேட்டிங் செய்ய சென்ற பொழுது ஹர்திக் பாண்டியா அடுத்து லெக் ஸ்பின்னர் வருவார் என்று என்னை கேலி செய்தார். இதற்கடுத்து நான் அங்கிருந்து இரண்டு ஷாட் விளையாடிய வேண்டி இருந்தது. அவரும் களத்தில் ஒரு நல்ல நண்பராக இருந்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஆஸி கிடையாது.. இந்தியாதான் டி20 உ.கோ-யை வெல்லும்.. காரணம் இதுதான் – மைக்கேல் கிளார்க் கருத்து

மேலும் இதே போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் சார்பாக விளையாடிய போது “அடுத்த டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெறுகின்ற திட்டமா?” என ரோகித் சர்மா அவரை களத்தில் கேலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதையும் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். தற்போது தினேஷ் கார்த்திக் நேராக எலைட் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்று டி20 உலகக் கோப்பைக்காக சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -