கோல்டன் டக் அவுட் ஆன பின்னர் சிரித்துக்கொண்டே பெவிலியன் நோக்கி நடந்த காரணம் இதுதான் – மௌனம் கலைத்த விராட் கோலி

0
240
Kohli Golden Duck out

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உண்டு. அதேசமயம் மீதமிருக்கும் இரண்டு போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உறுதி படும்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அந்த அணியின் நட்சத்திர வீரர் என்று சொல்வதை விட அந்த அணியின் முகமாக பார்க்கப்படும் விராட் கோலி இந்த சீசனில் மிக சுமாராகவே விளையாடி உள்ளார். 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரே ஒரு அரை சதத்துடன் 216 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இந்த சீசனில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 19.64 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 111.34 மட்டுமே.

மூன்று முறை கோல்டன் டக் அவுட் ஆகி உள்ள விராட் கோலி

இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் சமீபத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியிலும் முதல் பந்திலேயே அதாவது கோல்டன் டக் அவுட் ஆகி உள்ளார். அவ்வாறு அவுட்டான பின்னர் முகத்தில் சிறிய சிரிப்புடன் அவர்களை நோக்கி நகர்ந்து சென்று உள்ளார்.

விராட் கோலி இதுபோன்று கோல்டன் டக் அவுட் ஆகுது மிகவும் அரிதான ஒன்றாகும். அதிலும் இவ்வாறு அவுட்டான பின்னர் எந்தவித ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தாமல், முகத்தில் சிரிப்புடன் பெவிலியன் நோக்கி செல்வது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு தான் சிரித்த காரணம் என்ன என்பதை விராட் கோலியை தற்பொழுது விளக்கிக் கூறியுள்ளார்.

இந்த காரணத்திற்காக தான் நான் சிரித்தேன்

கடவுளே இது போல நான் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகியது இல்லை. நான் தற்பொழுது இதையும் என்னுடைய கிரிக்கெட் கேரியரில் பார்த்து விட்டேன். இந்த விளையாட்டில் நான் பார்க்க வேண்டிய விஷயம் இதுவும் ஒன்று என புரிந்து கொண்டேன். இந்த விளையாட்டில் என்னென்ன பார்க்க வேண்டுமோ அனைத்தையும் பார்த்து விட்டேன் அந்தக் காரணத்திற்காகவே நான் அவ்வாறு புன்னகைத்து நடந்து சென்றேன் என்று விராட் கோலி தான் சிரித்த காரணத்தை விளக்கி கூறியுள்ளார்.

என்னுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது

அதேபோன்று விராட் கோலி தற்பொழுது மோசமான ஃபார்மில் இருக்கிறார் எனவே அவர் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்த வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி கூட இதேயே தான் கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்த விராட் கோலி, “நான் என்ன உணர்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்து விட முடியாது. என்னுடைய இடத்தில் இருந்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவர்கள் நினைத்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவிட முடியாது.

சத்தத்தை நீங்கள் எவ்வாறு குறைப்பீர்கள். ஒன்று தொலைக்காட்சியின் ஓசையை மியூட் செய்வீர்கள், அல்லது மக்கள் கூறுவதை தவிர்க்கவோ அல்லது அவர்கள் கூறும் விஷயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்தக்கூடாது. நான் இந்த இரண்டையுமே செய்து வருகிறேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.