சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாத பிசிசிஐ, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் படி கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக விளங்கும் விராட் கோலி, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் விராட் கோலியின் சராசரி 46.85 என்ற அளவில் இருக்கின்றது. இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டிலுமே பத்தாயிரம் ரன்களை தாண்டியது வெறும் ஏழு பேட்ஸ்மேன்கள் தான்.
ஜாம்பவான் லிஸ்டில் இணைவாரா?
டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் என்றால், அது இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றால் சச்சின், ராகுல் டிராவிட், கவாஸ்கர் மட்டும்தான். இந்த பட்டியலில் விராட் கோலி சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் அதற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டால் இந்த சாதனையை தொட முடியாது. இது குறித்து விராட் கோலி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் அடிப்பது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் நான் என்ன சாதனைகளை செய்து வருகிறேன் என்பதை எல்லாம் பார்ப்பது கிடையாது. ஒரு போட்டியில் சதம் அடித்த பிறகு தான் நான் அதில் ஏதேனும் சாதனை செய்தேன் என்று எனக்கு தெரியவரும். போட்டிக்கு முன்பு இதைப்பற்றி எல்லாம் நான் கவனத்தில் எடுத்துக் கொண்டது கிடையாது.
10000 ரன்கள் அடிப்பதே குறிக்கோள்:
ஆனால் போட்டிக்கு பின் தான் இதையெல்லாம் தெரிய வரும். சில சமயம் ஐந்து இன்னிங்ஸ்களில் இதை செய்ய வேண்டும். மூன்று சதம் தேவைப்படுகிறது. இதை செய்தால் சாதனை படைத்து விடலாம் என்றெல்லாம் செய்திகள் வரும். ஆனால் அதைப் பற்றி நான் கேட்டுக் கொண்டது கூட கிடையாது.
இதையும் படிங்க: பஞ்சாப் கிங்சுக்கு விதிவிலக்கு.. குறித்த தேதியில் ஐபிஎல்-லை முடிக்க.. புதிய திட்டங்கள்.. நிலவரம் என்ன?
அது என்னுடைய வழியும் கிடையாது. ஆனால் என்னுடைய குறிக்கோள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் அடிக்க வேண்டும். அதை நான் எட்ட முயற்சி செய்வேன் என்று விராட் கோலி கூறியிருந்தார். இந்த சூழலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி அந்த சாதனை அருகே சென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.






