ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட்டில் வெறும் 7 ரன்கள் அடித்தால் விராட் கோலிக்கு புதிய உலக சாதனை – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

0
1018
Virat Kohli

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாளை துவங்குகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும். அப்படி இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டால், தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி கைப்பற்றும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாக அமையும்.

எனவே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தற்போது தயாராகி கொண்டு வருகின்றனர். அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டீ காக் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், அந்த அணி மிடில் ஆர்டரில் அவருக்கு இணையான பேட்ஸ்மேனை விளையாட வைத்தாக வேண்டும். ஆக மொத்தத்தில் கடும் சவாலுடன் தென் ஆப்பிரிக்க அணி 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகிறது.

- Advertisement -

புதிய வரலாற்றை விராட் கோலி படைப்பாரா

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்கிலுள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. அந்த மைதானத்தில் இந்தியன் அணி பேட்ஸ்மேன்கள் மத்தியில் புஜாரா மற்றும் விராட் கோலி மட்டுமே சதமடித்து இருக்கின்றனர். 2013ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரும் அந்த மைதானத்தில் சதம் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடிய எதிரணி பேட்ஸ்மேன் ( வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ) மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி வலம் வர அவருக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த மைதானத்தில் அவர் 7 ரன்கள் குவிக்கும் பட்சத்தில், இந்த மைதானத்தில் விளையாடிய வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி புதிய சாதனை படைப்பார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைப்பாரா, அதே சமயம் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என தற்பொழுது அனைத்து இந்தியர்களும் அந்த டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். நாளை இந்திய நேர அளவில் 1:30 மணிக்கு இந்த போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -