கோலி கண்டிப்பா இந்த விஷயத்தை செய்யனும்.. அப்போதான் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெயிக்க முடியும் – பிராட் ஹாக் கருத்து

0
61
Virat kohli and Brad hogg

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரது செயல்பாடு இந்திய அணிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் விராட் கோலியின் பேட்டிங் திறன் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி திடீரென விலகிய நிலையில் அதற்குப் பிறகு இந்த ஆண்டின் மத்திய பகுதியில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டில் இந்திய அணி அதிக டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடியதால் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறைவாகவே இருந்தது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆறு ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களும் குவித்தார். இந்த சூழ்நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருப்பதால் அதற்கு முன்னதாக விராட் கோலி ஃபார்முக்கு வர வேண்டியது அவசியமாக உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறும்போது ” விராட் கோலி அடுத்த 15 வாரங்களில் நடைபெற இருக்கிற பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும். விராட் கோலி முன்னேறி அவர் தனது பழைய ஆட்டத்தை பெற வேண்டும். அவரது நிலை தன்மையை மீண்டும் அடைய வேண்டும். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்ல வேண்டுமானால் கோலியின் நான்காவது இடம் முக்கிய பங்கு வகிக்கும்.

நம்பர் 4, பேட்டிங்கில் ஒரு முக்கியமான நிலை. நீங்கள் ஆட்டத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் நிலை இது. நீங்கள் இன்னிங்ஸின் பிற்பகுதியில் பேட்டிங் செய்ய வேண்டி வரும். மேலும் மிடில் ஆர்டரில் அவர்கள் அதிரடியான பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பதால் இன்னிங்ஸ் முழுவதும் இறுதிவரை பேட்டிங் செய்து கோலி சிறப்பாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:இந்தியாவில் ஜெயிக்கிறது ஏன் கஷ்டம் தெரியுமா?.. மீறி ஜெயிக்க இந்த ஒரு வழிதான் இருக்கு – மார்ட்டின் கப்தில் பேட்டி

விராட் இந்த நிலையில் இருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்துவது என்பது கடினமாக இருக்கும். அவர் அதை நோக்கி முன்னேற வேண்டும். ஒருவேளை அவர் செயல்படத் தவறினால் தேர்வாளர்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? அல்லது விராட் கோலிக்கு அதிக வாய்ப்பு கொடுப்பார்களா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -