56 இன்னிங்ஸ் குறைவு.. சச்சினின் 18 வருட சாதனை.. கோலி இன்று உடைப்பாரா?.. அருமையான வாய்ப்பு

0
457
Virat

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது அடுத்தடுத்து ஏதாவது சாதனைகளை செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். இந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மகத்தான ஒரு சாதனைக்கு மிக அருகில் இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சச்சின் 49 சதங்கள் தாண்டி 50வது சதத்தை பதிவு செய்தார். மேலும் உலக கிரிக்கெட்டில் மிக வேகமாக ஆயிரம், ஆயிரம் ரன்களை கடந்து கொண்டு வந்திருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு மிகவும் உகந்த வடிவமாக ஒருநாள் கிரிக்கெட் வடிவம் இருந்து வருகிறது.

- Advertisement -

தற்போது மாறிவரும் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து இருப்பதால் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிகபட்சமாக எடுத்திருக்கும் 18,426 ரன்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பது என்பது கொஞ்சம் கடினமானதாக அமையும். தற்பொழுது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 13, 872 ரன்கள் எடுத்திருக்கிறார்.

மேற்கொண்டு விராட் கோலி 4 வருடங்கள் கிரிக்கெட் விளையாடுவார் என்றாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வருடத்திற்கும் மிகவும் குறைந்து விட்டதால் அவரால் மேற்கொண்டு 5000 ரன்கள் பக்கம் எடுப்பது கடினமான ஒன்றாக இருக்கும்.

- Advertisement -

அதே சமயத்தில் விராட் கோலி இன்னும் 128 ரன்கள் எடுத்தால் அதிவேகத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்கள் எடுத்திருந்த சச்சின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைப்பார். மேலும் சச்சின் 350 இன்னிங்ஸ்களில் 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெசாவரில் 14 ஆயிரம் ரன்களை கடந்தார்.

தற்போது விராட் கோலி ஒட்டுமொத்தமாக 293 இன்னிங்ஸ்கள் விளையாடி 13,872 ரன்கள் எடுத்திருக்கிறார். மேற்கொண்டு அவர் 128 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரை விட 56 இன்னிங்ஸ்கள் குறைவாகவே அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டி விடுவார். மேலும் தற்போதைக்கு 14,000 ரன்களை அதிவேகமாக எட்டியதில் இரண்டாம் இடத்தில் இலங்கையின் குமார் சங்கக்காரா 378 இன்னிங்ஸ்களில் இருக்கிறார்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வம்பு செய்யக்கூடாது – பாக் சக்லைன் முஸ்டாக் கருத்து

மேலும் போட்டி நடைபெறும் கொழும்பு மைதானம் விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிக மிக சாதகமான ஒரு மைதானம். எனவே இன்று விராட் கோலி சதம் அடிப்பதுடன் இந்த சாதனையையும் கடக்கும் பொழுது சிறப்பான ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -