விராட் கோலிய நேத்து பாத்துட்டு இதை ஏத்துகவே முடியல.. 2 வருஷம் வீணா போயிடுச்சு – ஷேவாக் வருத்தம்

0
384
Virat

நேற்று ஆர்சிபி அணியின் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. ஆனாலும் விராட் கோலியின் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது. இது குறித்து வீரேந்தர் சேவாக் மிகவும் வருத்தமடைந்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது விராட் கோலியை மிகவும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. 15 ஓவர்களில் 173 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்று இருந்த ஆர் சி பி அடுத்த 16 ரன்னில் ஏழு விக்கெட்டுகளை கொடுத்து 189 ரன்னில் ஆல் அவுட் ஆகி 42 ரன் வித்தியாசத்தில் தோற்று வெறுப்பேற்றியது.

- Advertisement -

தரமான விராட் கோலி

நேற்றைய போட்டியில் ஆரம்ப கட்டத்தில் பில் சால்ட் பந்துகளை சந்திப்பதற்கு மிகவும் தடுமாற்றமாக இருந்தார். இந்த நேரத்தில் விராட் கோலி அதிரடியாக விளையாடி பில் சால்டை ஒரு முனையில் காப்பாற்றினார். மேலும் அவர் மீது ரன் அழுத்தம் ஏற்படாதவாறு இருநூறு ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிக் கொண்டு வந்தார். பவர் பிளேவில் அவர் கொடுத்த அற்புதமான துவக்கமே ஆர்சிபி அணி தொடர்ந்து முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

தன்னுடன் விளையாடக்கூடிய வீரர் சரியான டச்சில் இல்லாத பொழுது விராட் கோலி அதிரடியாக ஆட்டத்தை எடுத்து செல்லக்கூடிய அளவுக்கு மிகவும் தரமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். இப்படியான நிலையில் அவருடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு வீரேந்தர் சேவாக்கை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

என்னுடைய விருப்பம் இதுதான்

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “நிச்சயமாகவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சீக்கிரமாகவே ஓய்வு பெற்று விட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் உடல் தகுதியை பேணி வருவதை பார்க்கும் பொழுது இன்னும் இரண்டு ஆண்டுகள் அவரால் விளையாடியிருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த முடிவுக்கு பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை விராட் கோலியால் மட்டுமே சொல்ல முடியும்”

இதையும் படிங்க : நாங்க ஜெயிக்கிறதை விட தோத்ததுதான் நல்லது .. இனி அதை பண்ணி கப்பை தூக்கிடுவோம் – ஆர்சிபி கேப்டன் பேச்சு

“இது ஒரு வீரரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. அல்லது அவர் சோர்வடைந்து இருக்கலாம். என்னை பொறுத்தவரையில் நேற்று அவர் விளையாடிய விதத்திலும் ஆற்றலை வெளிப்படுத்திய விதத்திலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -