இந்திய அணி மற்றும் ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வலைப்பயிற்சியின் போது பந்துவீச்சாளர்களை எந்த அளவுக்கு கடினமான முறையில் தள்ளுகிறார் என்பது குறித்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் கூறியிருக்கிறார்.
இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி 12.25 கோடி ரூபாய் கொடுத்து இவரை வாங்கியது. கடந்த ஆண்டு காயத்தால் இவரும் விளையாட முடியாததால் கழட்டிவிட்ட ஆர்சிபி இந்த முறை மீண்டும் ஏலத்திற்குள் சென்று வாங்கிக் கொண்டது. அந்த அளவிற்கு இவர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது.
அவரை பார்த்தா முடிஞ்சது
இந்த நிலையில் விராட் கோலி பந்துவீச்சாளர்களை வலை பயிற்சியில் எவ்வாறு தீவிரமாக செயல்பட வைக்கிறார் என்பது குறித்து ஜோஸ் ஹேசில்வுட் பேசியிருக்கிறார். மேலும் கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெல்வதற்கு ஆர்சிபி அணிக்கு இவர் முக்கிய காரணமாகவும் இருந்தார்.
இது குறித்து ஜோஸ் ஹேசில்வுட் பேசும் பொழுது “நீங்கள் எப்பொழுதும் பயிற்சியை கொஞ்சம் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் பயிற்சிக்கு சென்று விராட் கோலியை பந்துவீச்சாளராக 22 யார்டில் பார்த்தால் அது உங்களை முன்னோக்கி தள்ளுகிறது. அங்கு பயிற்சி என்பது ஒரு போராக மாறிவிடும். குறிப்பாக அவருக்கு அந்த ஆரா இருக்கிறது”
எல்லா வடிவத்திலும் அவர் எங்களுக்கு தலைவலி
“அவர் விளையாட்டில் இதுவரை என்ன செய்திருக்கிறார், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் மிகவும் முழுமையாக மதிக்கிறேன். அவர் உங்களை நோக்கி வந்து ஷாட்களை விளையாடக்கூடிய ஒரு வீரர். இது ஸ்கோர் போர்டை நகர்த்தி கொண்டே இருக்க உதவும் என்பதால், இது எப்பொழுதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்”
இதையும் படிங்க : மும்பைக்கு அடுத்து நாங்க காத்திருக்கிறது ஆர்சிபிதான்.. விராட் இருந்தாலே இப்படிதான் – ருதுராஜ் பேட்டி
“விராட் கோலியை பொறுத்தவரை அவர் எங்களுக்கு எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் மிக முக்கியமான விக்கெட். அவர் எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் எங்களுக்கு எதிராக நிறைய சதங்கள் எடுத்திருக்கிறார். நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு உங்களை அவர் உண்மையிலேயே உந்தித் தள்ளுகிறார். நீங்கள் பயிற்சியை முடிக்கும் பொழுது உண்மையில் போட்டிக்கு தயாராகி விடுவீர்கள்” என்று கூறி இருக்கிறார்.






