நாளை 18 வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேட்டியளித்திருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு காரணம் இரு அணிகளும் கடந்த ஆண்டு கடைசியாக மோதிக்கொண்ட போட்டியில் ஏற்பட்ட சம்பவம் இருக்கிறது.
முதல் முறை ஆர்சிபி அசத்தல்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் வெல்லும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது. எனவே வழக்கமாக அழுத்தம் மிகுந்த போட்டிகளில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வெல்ல முடியாது என்ற கருத்து நிலவி வந்தது.
இப்படி அவன் நிலையில் ஆர்சிபி அணி பெங்களூரில் தங்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த நேரத்தில் மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் இரு அணி ரசிகர்களுக்கும் இடையே பெரிய பகையை உருவாக்கி விட்டது. எனவே இந்த முறை ஆர்சிபி அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து வீழ்த்த சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
விராட் கோலி இருந்தால் போட்டியிருக்கும்
இது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசும் பொழுது “இப்போது ஆர்சிபி அணி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் விராட் கோலி விளையாடும் பொழுதும், அவர் நம்முடைய எதிரணியில் இருக்கும் பொழுதும் அது சிறந்த மோதலாகத்தான் இருக்கும். அவர் ஆர்சிபி அணிக்காகவும் நாட்டுக்காகவும் நிறைய முறை தொடர்ந்து இதை செய்து கொண்டு வருகிறார். மும்பை அணிக்கு அடுத்து நாங்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கும் போட்டி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிதான்”
இதையும் படிங்க: கோலி, ரோகித் ஊதியத்தை குறைக்க பிசிசிஐ முடிவு.. ஸ்ரேயாஸ், அபிசேக் சர்மாவுக்கு புதிய ஒப்பந்தம்?
“ஆர்சிபி அணிக்கு எதிராகவும் குறிப்பாக அந்த அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் விளையாடுவதையும் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அந்த அணியின் கேப்டனாக அவர் பெயரை அறிவித்ததுமே நான் அவருக்கு வாழ்த்து அனுப்பினேன். நாங்கள் இப்போது சிறிது காலமாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றோம். வெளிப்படையாகவே ஆர்சிபி அணி வலிமையான அணிகளில் ஒன்று” என்று கூறி இருக்கிறார்.






